Menu
Your Cart

விகடன் இயர் புக் 2014

விகடன் இயர் புக் 2014
Out Of Stock
விகடன் இயர் புக் 2014
விகடன் பிரசுரம் (ஆசிரியர்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆன்றோர் பலரின் பங்களிப்புடன், அரிய படைப்புக்களைப் புத்தகங்களாக வெளியிட்டு சமூகத்துக்கு அறிவுத் தொண்டாற்றும் விகடன் பிரசுரம், தகவல்களை மொத்தமாகத் திரட்டி புத்தக வடிவில் ‘விகடன் இயர்புக் 2014’-ஐ தந்துள்ளது. கடந்த ஆண்டு முதன்முறையாக விகடன் இயர்புக் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதன் பலத்தில் இந்த ஆண்டும் வெளிவருகிறது. ‘இது இருந்தால் ஜெயிக்கலாம்! ஆம்! 'விகடன் இயர்புக் 2014' வெற்றி பெறும் வித்தையைச் சொல்லித் தரப்போகிறது! இந்த புத்தகத்தில் 2013-ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் அதாவது, நாட்குறிப்புகள், இந்திய அரசியல், சமூகம் பற்றிய அன்றாடத் தகவல்கள், இந்திய பட்ஜெட், உலகம் பற்றிய பல்வேறு உபயோகமான தகவல்கள், உலகநாடுகள் பற்றிய செய்திகள், உலகத்தில் நடைபெற்ற போர்கள், உலக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், இந்திய அளவில் புள்ளிவிவரங்கள், ஒவ்வொரு மாநிலங்கள் பற்றிய விவரங்கள், தேர்தல்கள், சமீபத்திய சட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. தமிழகம் பற்றிய புள்ளிவிவரம், ஆட்சி அமைப்புகள், தமிழகத்தின் வேளாண்மை, தொழில் வளம், திட்டங்கள், சுற்றுலாத் தலங்கள், மாவட்டங்கள் பற்றிய பார்வை என தமிழகத்தை ஒட்டிய தகவல்கள் ஏராளம். அறிவியல் தொழிற்நுட்பம் என்ற பிரிவில் சைபர் க்ரைம் கலைச்சொற்கள், நெட்பேங்கிங், கடல்சார் வளங்கள், பேரிடர் மேலாண்மை என வியக்கவைக்கும் தகவல்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. மருத்துவம் குறித்த விளக்கங்கள் குறிப்பாக மூட்டு நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் பற்றிய விவரங்கள் அடுக்கடுக்காக உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வெற்றி வீடு தேடி வர இதிகாசங்கள் பற்றிய க்விஸ் குறிப்புகள், அறிவுசார் விஷயங்கள், அரசு நிவாரண உதவிகள் போன்ற தகவல்கள். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள், தமிழ் வழி ஐ.ஏ.எஸ்., தேர்வுகளுக்கான பொது அறிவுப்பெட்டகமாக இந்த நூல் மலர்ந்துள்ளது. இதுமட்டுமா? ஆங்கிலத்தில் பொது அறிவு சார்ந்த கேள்விகள், தேர்வுக்கான தகவல்கள், டி.ஆர்.பி., தேர்வுக்கான வினா-விடைகள், எளிமையான ஆங்கிலப் பயிற்சி, இந்திய சினிமா தகவல்கள், வாழ்வியலுக்கு என்றென்றும் வழிகாட்டும் காந்திய,பெரியாரிய சிந்தனைக் கருவூலம் ஆகியவை இந்தப் புத்தகத்துக்கு பலம் சேர்த்துள்ளது. இப்போது சொல்லுங்கள் ‘விகடன் இயர்புக் 2014’ உங்கள் கையில் தவழும் அறிவுலகம்தானே! வாருங்கள் அறிவுலகத்தின் வாசல் திறப்போம்! வெற்றி வாகை சூடுவோம்!!

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம்தொட்டு, சுதந்திர தேசத்தின் இன்றைய ஆட்சி முறை வரையில் தயங்காமல் விமரிசனங்களை வெளியிட்டு வருகிறது விகடன். மகா..
₹ 200
அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அப்படியே முடங்கிக் கிடப்பது ஒரு சாபக்கேடு! விளம்பரத்திலும் வியாபார நேர்த்தியிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேறிக் கொண்டிருந்த தொலைத்தொடர..
₹ 100
‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல’ - ஜூனியர் விகடன் இதழ் செயல்பட்டு வருவதை அதன் லட்சக்கணக்கான வாசகர்கள் அறிவார்கள். ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு’ என்று அதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், வாசகர்களால் வழங்கப்பட்ட முத்திரை வரிகள்தானே! ஜூ.வி. இதழ்களில் வெளியாகும் ‘மிஸ்டர் கழுகு’ ஒரு மகுடம் என்..
₹ 90
“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடல..
₹ 250
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.