Menu
Your Cart

கருங்கடலும் கலைக்கடலும்

கருங்கடலும் கலைக்கடலும்
-5 %
கருங்கடலும் கலைக்கடலும்
தி.ஜானகிராமன் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தி. ஜானகிராமனின் 'கருங்கடலும் கலைக்கடலும்' பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ,ஏ. கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தியாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி. ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங்களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோளரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. தி. ஜா. தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார். தாம் கண்ட தெருக்களில் மிகமிக ஓங்கி நிற்கும் சூன்யத்தைப் பற்றிப் பேசுகிறார். தலைக்குமேல் இஷ்ஷென்று பறந்துபோகும் பறவையை ரசிக்கிறார். சந்தடியற்ற தெருக்களில் புலன்கள் கூர்ந்துவிடுவதால் சிறிய மணங்களைக்கூட நுகரமுடிகிறது என்கிறார். வெள்ளைக்காரர் ஒருவரிடம் உங்கள் கண் எப்படி இவ்வளவு நீலமாக இருக்கிறது என்று குழந்தைபோல் கேட்கிறார். செக்கோஸ்லவாகயாவில் பனி பொழிவதை லட்சம் தும்பைப் பூக்கள் வெள்ளைவெளேரென்று வெளியே உதிர்ந்துகொண்டிருந்தன என்று கவிதை ஆக்குகிறார். மனிதர்களை, நகரங்களை, சாப்பாட்டை ரசனையோடு வர்ணிக்கிறார். பயண அனுபவத்தை நாவலின் சுவாரஸ்யத்துடன் படைத்து தமிழ் வாசகனுக்கு விருந்தாக்குகிறார் தி. ஜா. - தஞ்சாவூர்க் கவிராயர்  

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒ..
₹513 ₹540
தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிறது...
₹171 ₹180
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இரு..
₹190 ₹200
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிரஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிற..
₹371 ₹390