Menu
Your Cart

மறவர் சீமை

மறவர் சீமை
-5 %
மறவர் சீமை
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்...

ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறு குறித்து 500 பக்கங்களுக்கு எழுதினாலும் அதில் தமிழக வரலாறு ஒரு பக்கத்தைக்கூடத் தாண்டாது. இந்தியாவில் காலூன்றி விட்ட ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக தென்னிந்திய அரசர்களும் சிற்றரசர்களும் விளங்கினர். அவர்களில் மருது பாண்டியர் முன்னோடி ஆவர்.

மருது பாண்டியர் வரலாற்றை அவரது சமகாலத்திய ஆங்கிலேயர்களான மேஜர் வெல்ஸ், டி.கெளர்வே, மதபோதகர் பாச்சி ஆகியோரும் பதிவு செய்துள்ளார். பல வரலாற்றுச் செய்திகளைத் தாங்கியுள்ள ரெவரண்ட் பாதர் பாச்சி எழுதிய நூல் மருது பாண்டியர்களின் வீரத்தையும் நாட்டுப்பற்றையும் பறைசாற்றுகிறது.

இதுவரை வெளித் தெரியாமல் கையெழுத்துப்பிரதியாக இருந்த ரெவரண்ட் பாதர் பாச்சியின் Maruthapandiyan - the Fateful XVIII Century எனும் நூலை மறவர் சீமை - ஒரு பாரதியாரின் பார்வையில்…. என்னும் தலைப்பில் திரு.மு.பாலகிருஷ்ணன், பேரா.எஸ்.ஆர்.விவேகானந்தம் ஆகிய இருவரும் முதன்முறையாகத் தமிழ்ப்படுத்தி வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

மராட்டியத்திலிருந்து நாங்குநேரி, களக்காடு வரையான அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து 1801 ஆம் ஆண்டு மருது சகோதரர்கள் நடத்திய போராட்டம்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்ற டாக்டர் கே.ராஜய்யனின் மதிப்பீடு ரெவரண்ட் பாதர் பாச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்தவுடன் உறுதிப்படுகிறது.


                                                              டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.,



Book Details
Book Title மறவர் சீமை (Maravar Cheemai)
Translator மு.பாலகிருஷ்ணன் (Mu.Paalakirushnan)
ISBN 9789382810155
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Pages 192
Year 2012
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, தமிழகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author