PANUVAL BOOK CLUB

PANUVAL BOOK STORE

   Thiruvanmiyur, Chennai-600 041

Warm Greetings from Panuval!!!

Hurry up for Exciting offers from Panuval Book Store for Book Lovers. You are invited to join in our “PANUVAL BOOK CLUB” which resolves your thrust of reading.

There are two kinds of schemes are available

Rs.2000 Scheme

  1. 10% Discount on every Book Purchase

  2. 2 Magazines – Free of Cost

  3. 4GB Pendrive

  4. At the end of the membership member can buy books worth of Rs.2000/- without discount

Rs.5000 Scheme

  1. 15% Discount on every Book Purchase

  2. 4 Magazines – Free of Cost

  3. 4GB Pendrive

  4. At the end of the membership member can buy books worth of Rs.5000/- without discount

சமூக நீதி நிகழ்வுகள் 2018

ஏப்ரல் 2018 – சமூக நீதி நிகழ்வுகள்

தலித் வரலாறுகள்

2014 முதல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி சென்னையிலுள்ள பனுவல் புத்தக நிலையம் ஏப்ரல் மாதத்தை சமூக நீதிக்கான மாதமாக அனுசரித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சமூக நீதி நிகழ்வுகளின் இந்த ஐந்தாம் ஆண்டில் தலித் வரலாறுகள் என்ற தலைப்பில் திரையிடல், நூல்கள் திறனாய்வு, கருத்தரங்கு என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

சாதியமைப்பு கட்டமைத்துள்ள ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமையின் கொடூரங்கள் ஆகியவற்றை எதிர்த்தும் மாண்பான வாழ்வை நாடியும் தலித் சமுதாயங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இத்தகைய போராட்டங்கள் களத்தில் மட்டுமின்றி அறிவுத்தளத்திலும் நடைபெற்று வந்துள்ளன.

வரலாறு, பண்பாடு ஆகியவற்றை விமர்சனபூர்வமாக அணுகுவது, கூட்டுநினைவில் உயிர்வாழும் வரலாறுகளை பதிவு செய்வது, மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட வரலாறுகளை இனங்கண்டு பொதுவில் வைத்து உரையாடுவது, வரலாறு எழுதுநெறிகளை மறுவரையறைக்கு உட்படுத்துவது என்று பல நிலைகளில் இன்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய ஆய்வுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் சமூக நீதி நிகழ்வுகள் அமையும். வழக்கம் போல சனி, ஞாயிறுகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.


இடம்: பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்
 
நேரம் – மாலை 5 30 – 8.30 
ஏப்ரல் 1
சிறப்புரை – முனைவர்  ஸ்டாலின் ராஜாங்கம், தலித் லரலாறுகள்: முயற்சிகள், கேள்விகள்
ஏப்ரல் 7
செம்மலர், தயாமலர், ஜெயராணி, தலித் பெண்களின் வரலாறுகளை எழுதுவோம் 
ஏப்ரல் 8
சாக்கிய சுரேந்தர், நடராஜன், வடசென்னை வரலாறுகள்: கரன் கார்கியின் நாவல்களை முன்வைத்து 
ஏப்ரல் 15 
வரலாற்று பேராசிரியர் கோ. ரகுபதியுடன் கலந்துரையாடல்
ஏப்ரல் 21
முனைவர் பொன்னுச்சாமி, தலித் வரலாறுகள் – வரம்புகளை கடந்து
ஏப்ரல் 22 
சிறப்புரை  மகராஷ்டிரத்தின் முக்கிய சமகால எழுத்தாளரான ஊர்மிளா பாவர் ,  நாங்களும் வரலாறு படைத்தோம்
ஏப்ரல் 28
திரையிடல் – சோம்நாத் வாக்மொரெயின் பீமா கொரேகான்
ஏப்ரல் 29
வ. கீதா, இளங்கோவன் கீதா, ராமமூர்த்தி – சாதி-எதிர்ப்பு வரலாறுகளுடன் வாழ்தல், அவற்றை விவாதித்தல்