Menu
Your Cart

புத்தம் சரணம்

புத்தம் சரணம்
-5 %
புத்தம் சரணம்
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புத்த பகவனால் முன்மொழியப்பட்ட பவுத்தம் உலகில் மூன்றாவது பெரிய மதம்; இன்று கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்படுகிறது. வேள்விச் சடங்குகள், வருண வேறுபாடுகள் என கங்கைச் சமவெளியில் வைதிக நம்பிக்கைகள் கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவற்றிற்குப் பதிலாக பஞ்சசீலம், தசசீலம், எண்வழிப் பாதை என அறம் சார்ந்த வாழ்வே இறுதி விடுதலைக்கான ஒரே வழி என ஒரு மாற்று நெறியை முன்வைத்த மாதவர்தான் புத்த பகவன். பவுத்தம் அது தோன்றிய மண்ணில் இன்று அழிக்கப்பட்டிருக்கலாம். பக்தியின் இடத்தில் அறத்தை வைத்த பவுத்தத்தை, தமிழ் பக்தி இயக்கம் தமிழகத்தைவிட்டு அகற்றி இருக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியங்களானாலும் வாழ்வானாலும் எங்கெல்லாம் அறம் போற்றப்படுகிறதோ அங்கெல்லாம் பவுத்தம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சென்ற நூற்றாண்டில் இந்திய மண்ணில் மீண்டும் பவுத்தம் துளிர்த்தது. புத்தர் ஒளிபெற்ற தலமாகிய புத்தகயா வைதிக நெறியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது; அண்ணல் அம்பேத்கர், தர்மானந்த கொசாம்பி, லட்சுமி நரசு, ரைஸ் டேவிஸ் முதலான எண்ணற்ற அறிஞர்கள் புத்தரின் வாழ்வை ஆராய்ந்து எழுதினர். மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அறிவுசார்ந்த ஆய்வுகளாக அவை இன்றும் மிளிர்கின்றன. அவர்களின் வழியில் நின்று அ. மார்க்ஸ் எழுதிய புத்த சரிதம்தான் நீங்கள் கையில் ஏந்தியிருக்கும் இந்த நூல். இது பவுத்தத்தின் அடிப்படைகளை மட்டுமல்ல, அதன் ஆழங்களையும் அது முன்வைத்த தம்ம நெறிகளையும் துல்லியப்படுத்திய வகையில் பவுத்தம் குறித்த ஒரு ஈடு இணையற்ற, அறஞான நூலாக மலர்ந்திருக்கிறது. பவுத்தம் குறித்து அறிமுகமாகப் பயில்வோர் மட்டுமின்றி, ஆழத் துறைபோகியோரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல்.
Book Details
Book Title புத்தம் சரணம் (Buddham Saranam)
Author அ.மார்க்ஸ் (A.Marx)
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 144
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க்ஸின் விமர்சன ஆய்வுரைகள்,வித்தியாசமான பார்வைகள்..
₹43 ₹45
குற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..
₹95 ₹100
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..
₹76 ₹150
கடந்த பத்மண்டுகளாக மருத்துவத் து​றையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப்பார்​வை​யை…..
₹114 ₹120