Menu
Your Cart

பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்)

பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்)
பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்)
Out Of Stock
பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்)
₹ 50

பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்) :

வணக்கம் சுட்டிஸ்,

உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து கதை சொல்லி, பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு, விளையாடினால் எப்படி இருக்கும்? செம ஜாலியாக இருக்கும் அல்லவா? அப்படித் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் ஜாலியாக இருந்து வருகின்றனர். அப்படி அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய கதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் தான் பஞ்சுமிட்டாய் இதழாக உருவானது.

பஞ்சுமிட்டாயின் முதல் நான்கு இதழகள் மின்னிதழாக (E - Magazine) வெளியானது. அச்சு இதழாக வெளியாக வேண்டுமென்று பலரும் விருப்பம் தெரிவித்தனர். அதன் சிறு முயற்சியாக சிறுவர்களின் கைக்குள் அடங்கும் வகையில் ''குட்டிப் பஞ்சுமிட்டாய்'' புத்தகமாய் வெளியானது. அதை உங்களைப் போன்றே சுட்டிகள் பலரும் மிகவும் ரசித்தனர். ரசித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களது படைப்புகளையும் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து '' பஞ்சு மிட்டாய் - 5 '' அச்சு இதழாக வெளியாகியுள்ளது. இனி '' பஞ்சு மிட்டாய் '' காலாண்டு இதழாக உங்கள் இல்லம் தேடி வர இருக்கிறது. 

இதில் குழந்தைகளின் ,

  • கதைகள், 
  • ஓவியங்கள், 
  • பாடல்கள், 
  • புதிர் என உங்களுக்கு பிடித்த விசயங்கள் நிறையவே உள்ளன. 

மேலும் உங்களுடைய படைப்புகளும் வரவேற்க்கப் படுகின்றன.

வாருங்கள் பஞ்சு மிட்டாயை சுவைக்கலாம்......

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.