Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முகமான சாவர்க்கரோடு புரட்சியாளர் அம்பத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும்; அம்பேத்கரின் ஆளுமையையும் அறிவையும் விடுதலைக் கோட்பாட்டையும் செரிக்க முடியாமல், அவரைத் திரிக்க் முயலும் பார்ப்பனியத்தின் சதியும் பேராபத்தானவை. வர்ணாஸ்ரம தர்மத்தை சீர்குலைத்த பேராசான் புத்தரை 'விஷ்ணுவின் அவதாரமாக்கியதை' போன்ற அயோக்கியத் தனத்தையே இவ்விரு செயல்திட்டங்களும் தம் இலக்காகக் கொண்டிருக்கின்றன.  ஜாதி நஞ்சை முறிப்பதற்கான ஆய்வின் செம்மாந்த வெளிப்பாடுதான் 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' நூல். ஜாதியைக் கொல்ல இந்து மதத்தைக் கொன்றாக வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் ஆய்வின் கரு. ஆனால் இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள அம்பேத்கர்-காந்தி உரையாடலையே இந்நூலின் முதன்மைக் கருத்தாகத் திசை திருப்பி இந்துமத எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள். பார்ப்பனர்களின் இத்தகைய திரிபுவாதம் தலித் மக்களை இந்துமயமாக்கும் சூழ்ச்சிக்குப் பயன்படுமா? அல்லது அம்பேத்கரியலை வளர்த்தெடுக்கப் பயன்படுமா? இந்நூல் குறித்து எண்பது ஆண்டுகளாக மயான அமைதி காத்த பார்ப்பன ஆளும் வகுப்பினர், திடீரென்று இதற்கு முன்னுரையும் பொழிப்புரையும் எழுத வேண்டிய தேவை என்ன? அருண்ஷோரி, ஜெயமோகன் வகையறாக்கள் அம்பேத்கரை அவதூறு செய்கிறார்கள் எனில் இடதுசாரி, முற்போக்கு முகமூடியுடன் அருந்ததி ராய்கள் திரிபுவாதம் செய்கிறார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் அதை வெளியிட அவர்கள் தேர்வுசெய்த இடமும் அதை உறுதி செய்கிறது.  இந்துமத எதிர்ப்பைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பவுத்தம் என்ற பகுத்தறிவுப் பண்பாட்டை ஒடுக்கப்பட்ட மக்களின் தாய்ப்பாலாக்கிய அம்பேத்கரை திரிபுவாதத்திற்கு உட்படுத்த தலித் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அம்பேத்கர் பவுத்தம் தழுவிய அறுபது ஆண்டுகளில் இந்நூல் நான்காம் பதிப்பாக வெளிவருகிறது.
Book Details
Book Title ஜாதியை அழித்தொழிக்கும் வழி (Jaathiyai Azhiththozhikkum Vazhi)
Author டாக்டர் அம்பேத்கர் (Taaktar Ampedhkar)
Publisher தலித் முரசு (Dalit Murasu)
Pages 144
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சினைகள்’ பற்றி ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர், தனது ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன்மொழிகிறார். பொதுக்கல்வித் துறையிலும், சட்டத்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானம், பொறியியலில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை..
₹60
புத்த மதம் வேறெந்த மதமும் செய்யாத விதத்தில் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை, அதாவது மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக..
₹75