Menu
Your Cart

ISIS கொலைகாரன்பேட்டை

ISIS கொலைகாரன்பேட்டை
-5 %
ISIS கொலைகாரன்பேட்டை
பா.ராகவன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அல்காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இராக்கில் மட்டுமே ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்களின் கோர மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்கா அப்பாவிப் பொதுமக்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி சிரியாவைவிட்டு இன்று இடம் பெயர்ந்துகொண்டிருப்பதில் ஐ.எஸ்ஸின் பங்கு பெரிது. சிரியா உள்நாட்டு யுத்தத்தில் ஐஎஸ் ஒரு மிக முக்கியக் கண்ணி. சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள். கோடி கோடியாகக் கொட்டும் பணம். உலகு தழுவிய நெட் ஒர்க் பலம். சந்தேகமின்றி ஐ.எஸ். இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஐ.எஸ். அமைப்பின் இந்த திகிலூட்டும் வளர்ச்சி மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள மத்தியக் கிழக்கு தேசங்களின் ஜாதி அரசியல் மற்றும் எண்ணெய் அரசியலின் வேர்வரை வெளியே இழுத்து விளக்குகிறார் பாரா. சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டும் எழுதியும் வரும் ஆசிரியரின் இந்நூல், ஐ.எஸ்ஸின் கோர முகத்தை முழுமையாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

யானி - பா.ராகவன்:ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூட இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி. க்ரீஸிலிருந்து சாதாரண ஆளாகக் கிளம்பி இன்று உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார். மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் மொஸார்ட்டைத் தொடர்ந்து வந்த மாபெரும் ..
₹86 ₹90