Menu
Your Cart

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
-10 % Out Of Stock
பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹180
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தார்கள். பில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவேன். கம்ப்யூட்டர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்னும் நிலையை ஏற்படுத்துவேன். குழந்தைகள் கூட ஆசையுடன் நெருங்கி வந்து பழகுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்குவேன். அசாதாரணமான கனவு அது. அந்தக் கனவை நினைவாக்க, அலாவுதீன் பூதம் போல் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கினார் பில் கேட்ஸ். உலகின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் ஜொலிக்கும் வரை ஒரு நொடிகூட ஓயவில்லை அவர். கடந்த இரு தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவுக்கு உலக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு பிரபலம் இல்லை. பில் கேட்ஸிடம் இருந்து ஏதாவதொரு நிர்வாகவியல் பாடத்தையாவது கற்றுக்கொள்ளாத தொழிலதிபரைப் பார்ப்பது அபூர்வம். மைக்ரோசாஃப்ட் என்னும் கனவு சாம்ராஜ்ரியத்தை உருவாக்க பில் கேட்ஸ் நடத்திய போராட்டங்களின் தொகுப்பே அவர் வாழ்க்கை. வாசித்து முடித்துவிட்டு, நம்பிக்கையுடன் உங்கள் கனவுக்கோட்டையைக்கட்ட ஆரம்பியுங்கள்.
Book Details
Book Title பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான் (Bill Gates Software Sulthan)
Author என்.சொக்கன் (N.Chokkan)
ISBN 9788183684378
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 232
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹180 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹270 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹135 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹167 ₹185