Menu
Your Cart

படச்சுருள் இதழ் (செப்ட் 2021)

படச்சுருள் இதழ் (செப்ட் 2021)
-5 %
படச்சுருள் இதழ் (செப்ட் 2021)
அருண் மோ (ஆசிரியர்)
₹19
₹20
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உள்ளடக்கம்: 1. படைப்புகளை மதிப்பிடும் அடிப்படை அளவீடு சமூகநீதி- அருண் மோ. 2. மணிரத்னத்தின் கேங்க்ஸ்டர்கள்- யமுனா ராஜேந்திரன் 3. மணிரத்னம்: மையநோக்கு விசை - மணி ஜெயப்பிரகாஷ்வேல் 4. நாடக பாணியின் வீழ்ச்சி: மணி ரத்னத்தின் சினிமா - பிரதீப் பாலு 5. மணிரத்தினத்தின் தீவிரவாதிகள் - ரதன் 6. மணி ரத்னபுரி: வணிக சினிமாவின் இணை பிரபஞ்சம் - வருணன் 7. மணிரத்னம்: மதிப்பீடுகள் அற்ற மாமேதை - பிச்சைக்காரன் 8. இயக்குநர் மணி ரத்னம் - தி.குலசேகர் தமிழ் ஸ்டுடியோவின் படச்சுருள் மாத இதழ் செப்டம்பர் மாதம் இயக்குநர் மணிரத்னம் சிறப்பிதழாக வெளிவருகிறது. மணிரத்னத்தின் அரசியல் சினிமா பற்றியும் அவரது சினிமா உருவாக்கம் பற்றியும் இந்த இதழ் அலசுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பிதழ் என முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் எல்லாரும் பேச மறுத்த மறந்த விடயங்களை படச்சுருள் பேசியது. தலித் சினிமா என்று சினிமாவில் தலித் சினிமா என்கிற அடையாளத்தை முதலில் பதிவு செய்த சினிமா மாத இதழ் படச்சுருள். அதன் ஓவ்வொரு இதழும் தமிழ் சினிமாவை பல்வேறு கோணங்களில் திறனாய்வு செய்த பொக்கிஷங்கள். படச்சுருள் அதன் அட்டைப்படத்திற்கென பலராலும் வெகுவாக கொண்டாடப்பட்ட இதழ். அடுத்த இதழ் அதாவது அக்டோபர் மாதம் முதல் படச்சுருள் நிகழ்கால சினிமாவை பேசும், சினிமாவை கற்றுத்தரும் தொழில்நுட்ப கட்டுரைகளுடன் contemporary இதழாக வெளிவரும். சிறப்பிதழாக இதுவே படச்சுருளின் கடைசி இதழ். எல்லா தரப்பு வாசகர்களுக்குமான பொதுவான இதழாக அக்டோபர் முதல் வெளிவரும். நிறைய மாற்றங்கள், புதுமையான கட்டுரைகள், சினிமாவை ரசனை, அரசியல், அழகியல், தொழில்நுட்பம் சார்ந்து பேசும் இதழாக படச்சுருள் தொடர்ந்து வெளிவரும்.
Book Details
Book Title படச்சுருள் இதழ் (செப்ட் 2021) (Padachurul)
Author அருண் மோ (Arun Mo)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 54
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Magazine |பருவ இதழ், மாத இதழ், Cinema | சினிமா, Monthly Magazines

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author