Menu
Your Cart

ரெயினீஸ் ஐயர் தெரு

ரெயினீஸ் ஐயர் தெரு
-5 %
ரெயினீஸ் ஐயர் தெரு
வண்ணநிலவன் (ஆசிரியர்)
Categories: நாவல்
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாருமே மழையின் அடிமைகள். எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக்கொண்ட ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். எளிமையான மனிதர்கள். ஆனால், அவர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கத்தக்கது. அத்தெருவில் யாரும் யாரையும் நேசிக்காமல் இருந்துவிடவில்லை. அவரவர்கள் போக்கில் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். நம் பக்கத்து வீட்டு நபர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய மிகச் சாதாரணமான மனிதர்களைக் கொண்டும் ஓர் அசாதாரணமான நாவலை உருவாக்கமுடியும் என்பதை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் வண்ணநிலவன். துன்பங்கள் அறவே ஒழிந்துவிடவில்லை. சிறிதே வீரியத்தை இழந்து போயிருந்தன. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருஷம் வரையிலும்கூட நீடித்திருக்கப் போகிற துக்கம் இப்போதும் இருந்தது. சின்னச் சின்ன சந்தோஷங்களும் நிரந்தரமாகிப் போன துயரங்களுமாக நீண்டுகொண்டே போகிறது வாழ்க்கை. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வைப் பிரதிபலிக்க முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு கணத்தை, சிறு அசைவை நாம் உணரும்படி செய்கிறபோது படைப்பு முழுமை பெற்றுவிடுகிறது. வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நிறைவைத் தந்துவிடுகிறது. அந்த வகையில், இந்த நாவல் தமிழில் வெளி வந்த மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.
Book Details
Book Title ரெயினீஸ் ஐயர் தெரு (Reyinees Iyer Theru)
Author வண்ணநிலவன் (Vannanilavan)
ISBN 9788184931495
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 96
Published On Nov 2008
Year 2009
Category நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். "பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல..
₹100 ₹120
தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது..
₹124 ₹130
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; ச..
₹86 ₹90
நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்...
₹86 ₹90