Menu
Your Cart

நீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட்

நீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட்
-5 % Out Of Stock
நீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட்
சிபி கே.சாலமன் (ஆசிரியர்)
₹90
₹95
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எவ்வளவு உயரம் எகிறிக் குதித்தாலும் எட்டாத வானம்போல வெற்றி ஆட்டம் காட்டுகிறதா? சே, ஜஸ்டு மிஸ்' என்று சலித்துக்கொள்கிறீர்களா? ஸ்டாப்! நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இனி உங்களுக்கும் வெற்றிக்கும் இடையிலான தூரம் என்பது, இந்தப் புத்தகம் இப்போது இருக்கும் இடத்துக்கும் உங்கள் கரங்களுக்கும் இடையில் உள்ள தூரம் மட்டுமே! ஓர் அடிப்படை ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற வஸ்துதான் அது! எளிய முயற்சிகளா! சந்தேகமே வேண்டாம். எளிமையானவைதான். மிக, மிக எளிமையானவை. நம்முடைய பெரும்பாலான செயல்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதால்தான் வெற்றி தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் அபாரமான வெற்றிக்கான எளிய, யதார்த்தமான வழிகளை, ஜோடனையில்லாமல் சொல்லித் தருகிறது. அதுவும் உங்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை எடுத்துத் தூசுதட்டிக் காட்டியே! சந்தேகமில்லாமல், இந்தப் புத்தகம் உங்களுடைய மனச்சாட்சி. அட, ஆமாம்! அட, ஆமாம்! என்று ஒவ்வொரு உதாரணத்தின்போதும் உங்கள் உள்ளம் துள்ளிக்குதிக்கப் போகிறது. ஒவ்வொரு முறை அப்படி நீங்கள் துள்ளும்போதும் ஓரடி உயரப் போகிறீர்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயித்தே தீரப்போகிறீர்கள். என்ன பெட்? '
Book Details
Book Title நீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட் (Enna Bet)
Author சிபி கே.சாலமன் (Sibi K.Solomon)
ISBN 9788183681650
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Published On Nov 2005
Year 2006

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப..
₹119 ₹125
உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி? உங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி? முரண்படும் ரூம்ம..
₹67 ₹70
நிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா? முடியும். தரம். சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் இல்லை என்று கொக்கர..
₹162 ₹170
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க குறுக்கு வழிகள் கைகொடுக்கின்றன. ஒரு..
₹152 ₹160