+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சிக்ஸ் சிக்மாவைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சுமார் நூறு பில்லியன் டாலர் வரை சேமித்திருக்கின்றன. அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள். கவனிக்கவும். இந்தப் பெருந்தொகையை அவர்கள் சம்பாதிக்கவில்லை. சேமித்திருக்கிறார்கள். எப்படி? உற்பத்தியில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்க உதவும் ஓர் உத்தியாகத்தான் சிக்ஸ் சிக்மா அறிககமானது. என்னதான் ஆகிறது பார்ப்போம் என்றுதான் முயன்று பார்த்தார்கள். பிரமிப்பின் உச்சத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றது சிக்ஸ் சிக்மா. பிழைகள் நின்றுபோனது மட்டுமல்லாமல் தரத்திலும் பளிச்சென்று ஒரு முன்னேற்றம். மின்னல் வேகத்தில், அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பறந்து சென்றது சிக்ஸ் சிக்மா. நம் தயாரிப்புகள் அல்லது சேவையின் தரத்தை பல மடங்கு உயர்த்த வேண்டுமென்றால் சிக்ஸ் சிக்மாதான் ஒரே வழி என்னும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்து சேர்ந்தன. இன்று, உலகம் முழுவதும் உள்ள பிசினஸ் சாம்ராஜியங்கள் கடைப்பிடிக்கும் மந்திர ஃபார்முலாவாக சிக்ஸ் சிக்மா மாறியிருக்கிறது. உலை முடுக்குகளில் எல்லாம் சிக்ஸ் சிக்மா குறித்த பயிலரங்கங்கள்; கட்டுக்கட்டாகப் புத்தகங்கள்; ஆய்வுகள். பெட்டிக் கடை, பெரும் நிறுவனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் முயன்று பார்க்கும் அத்தனை பேரையும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும் பிசினஸ் தேவதையாக சிக்ஸ் சிக்மா மாறியிருக்கிறது. நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. தனி நபர்களின் மேன்மைக்கும் இதைக் கடைப்பிடிக்கலாம். மிக எளிய சமன்பாடுகள். கயன்று பார்க்கத் தூண்டும் செயல்முறைகள். பாடப்புத்தகம் போல் படிக்காமல் ரசித்துப் படித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..
1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..
இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..