Menu
Your Cart

உயரப் பறத்தல்

உயரப் பறத்தல்
-5 % Available
உயரப் பறத்தல்
வண்ணதாசன் (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.’ - வண்ணதாசன் வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை முதுபெரும் இலக்கியவாதி தி.க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962&ம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். எதார்த்தமான எழுத்துக்களால் இலக்கிய உலகை ஆளும் வண்ணதாசனின் எழுத்துக்களும் வண்ணமயமானவை. மனிதர்களின் மனதைக் கற்றவர் வண்ணதாசன். அதனால்தான் அவரது எழுத்துக்கள் அழகாக ஜொலிக்கின்றன. இளையதலைமுறை வாசிக்க, வண்ணதாசனின் உயரப் பறத்தல் சிறுகதைத் தொகுப்பு எமது விகடன் பிரசுரம் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. வண்ணதாசனின் வண்ணங்களால் ஆன உலகை தரிசிக்க... பக்கத்தைப் புரட்டுங்கள்!

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

   ஒரு சிறு இசை   -  வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய  அகாதெமி விருது பெற்ற நூல்...........                அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,       முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்....       நாம் ஏன் அவரவர் ..
₹152 ₹160
    நான் என் கிளையோடும்,இலையோடும், நிழலோடும்நின்றுகொண்டு இருக்கிறேன். நான்ஒளியிலே தெரிவேன். அல்லது என்நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒருஎளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்..
₹133 ₹140
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைதான் செய்யும்... நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன..
₹71 ₹75
எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்த..
₹90 ₹95