Menu
Your Cart

காலம்

காலம்
-5 % Out Of Stock
காலம்
வண்ணநிலவன் (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இலக்கியம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறுவர். மனித வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கைச் சக்கரத்தோடு பிணைந்திருக்கிறது. சந்தோஷம் தரும் தருணங்கள் மனிதனை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. துக்கம் தரும் சமயங்களில் மனம் ஆறுதலையும் உறவுகளையும் நாடிச் செல்லும். அப்போது கிடைக்கும் ஊக்கமே மனிதனை தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் வாழ்க்கை மீதான பிடிப்பை உறுதியடையச் செய்கிறது. அப்படியான சூழலை 'காலம்' எனும் இந்நாவல் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு சிற்றூரில் வசிக்கும் சராசரி இளைஞன், அவனது மனதில் உள்ள வாழ்க்கையைப் பற்றிய மனச் சித்திரம், இயற்கையான உணர்வுகளால் ஏற்படும் தடுமாற்றம், ஆறுதல் தரும் சிநேகம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் மீதான மதிப்பீடு, கோர்ட் குமாஸ்தா வேலையில் அடையும் மனநிறைவு என வேறொரு உலகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வண்ணநிலவன். இந்நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்தான். ஆனால், அவர்களின் மறுபக்கத்தை வியக்கவைக்கும் வகையில் மிக நுட்பமாகச்
Book Details
Book Title காலம் (Kaalam)
Author வண்ணநிலவன் (Vannanilavan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். "பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல..
₹114 ₹120
தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது..
₹124 ₹130
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; ச..
₹133 ₹140
நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்...
₹86 ₹90