Menu
Your Cart

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக் கதைகள்

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக் கதைகள்
-10 %
வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக் கதைகள்
இந்திரன் (ஆசிரியர்)
₹500
₹555
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
படித்து இரசிப்பதற்கும், நீதியிலிருந்து பிறழாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதற்கும், உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவர்களிடம் கவனமாக நடந்துகொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் இந்நூல் உங்களுக்கு உதவும்.பறவையினங்களுக்கும், விலங்கினங்களுக்கும், பிராணிகளுக்கும் உள்ள அத்தனை குணங்களும் உயிரினங்களிலேயே மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படும் மனித இனத்திற்கும் உண்டு. இத்தகைய குணமுள்ளவர்கள் அனைவருமே நம் முன் நடமாடிக் கொண்டுதானிருக்கிறார்கள். மனிதக் கதாபாத்திரங்களைக் கொண்டு இக்கதைகள் புனையப்பட்டிருந்தால் சில கதாபாத்திரங்களின் தன்மையை இவ்வளவு சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியிருக்க முடியாது. இக்கதைகளின் முக்கிய கதாபாத்திரங்கள் குருவி, காக்கை, சிங்கம், நரி போன்றவைகள்தான். அவை இந்தக் கதைகளில் பேசும் நீதிகள் அனைத்தும் மானிட சமுதாயத்திற்கும் மிகவும் பொருந்துபவையாக இருப்பது தனிச் சிறப்பு.சமஸ்கிருத மூல நூலிலுள்ள கதைகளை, அதிலுள்ள நீதிகளை ஒன்றுவிடாமல் வாசகர்கள் மனதில் நன்றாகப் பதிய வைக்கும் நோக்கத்தில் சிறப்பான வடிவமைப்பில் கொடுக்கிறது இந்தப் புத்தகம். நம் நாட்டின் பொக்கிஷங்களாகப் போற்றப்படுபவற்றில் பஞ்ச தந்திரக் கதைகள் போன்ற நீதி நூல்களுக்கும் முக்கியமானதொரு இடமுண்டு. இவை எந்தக் காலத்தில் படித்தாலும் குன்றாத சுவையுடன் இருப்பவை.
Book Details
Book Title வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக் கதைகள் (Vaazhviyal Neethikkoththu Enum Panchathanthira Neethikathaigal)
Author இந்திரன் (Indhiran)
ISBN 9789382578048
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 560

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பீர்பால் அறிவுக் கதைகள்பீர்பால் அறிவுக்கதைகள் படிப்போரின் சிந்தனையை துண்டும் வகையில் சிறபபாக அமைக்கப்பட்டுள்ளது..
₹149 ₹166
சத்யஜித் ரே சினிமாவும் கலையும்ரே எனும் சினிமா கலைஞனைக் கடவுளாக்கி வீரவழிபாடு செய்யும் நோக்கம் எதுவும் எனக்கில்லை.இந்திய சினிமாவின் மனசாட்சியாக இயங்கி வரும் புது சினிமாவின் முன்னோடி என்கிற விதத்தில் அவர் வரலாற்றின் ஒரு பகுதியாகப் போய் நாளாகியும் விட்டது.இன்றைய தமிழ் சினிமாவின் புதிய எல்லைகள்,அவற்றை வ..
₹135 ₹150
பிணத்தை எரித்தே வெளிச்சம்( தலித் இலக்கியம்: குஜராத்தி - மராத்தி - தமிழ் ) - இந்திரன் :..
₹162 ₹180