Menu
Your Cart

கடல் - சமஸ்

கடல் - சமஸ்
-5 %
கடல் - சமஸ்
சமஸ் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தி இந்து நாளிதழில் "நீர் நிலம் வனம்" என்ற பெயரில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. மீனவர்கள் கடலில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கை கடலுக்கும் கரைக்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது. கடலுக்குள்ளும் வெளியிலும் ஆழமும் அடர்த்தியும் கொண்டு விரிந்து கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வை உள்ளது உள்ளபடி வெளிக்காட்டும் முயற்சியே இந்நூல். சமஸின் இந்தக் கட்டுரைகள் கடல் சார் வாழ்க்கை பற்றியும் கடலை நம்பி வாழ்வும் மனிதர்கள் பற்றியும் கரிசனத்தோடு பேசுகின்றன. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வரலாற்றை இவை சொல்கின்றன. பல ஊர்களையும் நிலங்களையும் மலைகளையும் கடல்வெளிகளையும் அவை சார்ந்த வாழ்க்கையையும் இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதில் வரும் மக்கள் மொழி மிகவும் முக்கியமானது. ஒரு மகத்தான இலக்கியவாதி தனது படைப்புகளின் மூலம் தன் மொழிக்குச் செய்யக் கூடிய பங்களிப்பை இந்த நூலின் மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் பேச்சுமொழியை ஒரு தேர்ந்த எழுத்துக் கலைஞனின் நுட்பத்துடன் சமஸ் பதிவுசெய்திருக்கிறார். வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரைகள் எவ்வித ஆழமோ, ஆய்வோ இன்றி எழுதப்படுபவை என்னும் பொதுவான குற்றச்சாட்டுக்கு மாறாக ஆழமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.
Book Details
Book Title கடல் - சமஸ் (Kadal)
Author சமஸ் (Samas)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Pages 200
Year 2024
Edition 2
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதை!திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு... இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டிய..
₹285 ₹300
யாருடைய எலிகள் நாம்?(கட்டுரைகள்) - சமஸ் :சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸுடைய எழுத்தும். ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆழத்தில் பாயும்..                                                                                                       ..
₹250
நாடு என்பது மக்களின் தொகுப்பு; அது நிலங்களின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் முதலும் இறுதியுமாய் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும்! சமகாலத்தின் முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சமஸ், 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். 'தினமணி', 'விகடன்' ஆசிரியர் குழுக்..
₹143 ₹150
சமகாலத்தின் முக்கியமான ஊடகர்களில் ஒருவரான சமஸ். 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். 'தினமணி', 'விகடன்' ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியவர். நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க 'தி இந்து' குழுமம் தமிழில் நானிதழ் தொடங்க முடிவெடுத்தபோது, அதன் உருவாக்க அணியாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர். இந்து தமிழ் நாளி..
₹143 ₹150