Menu
Your Cart

சினிமாத்துவம்: காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்

சினிமாத்துவம்: காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்
-10 %
சினிமாத்துவம்: காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்
ஜமாலன் (ஆசிரியர்)
₹306
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில் திரைப்படம் என்ற சினிமா (இதனை தமிழில் ‘திரையாக்கம்’ என்ற சொ்ல்லால் குறிக்கலாம்) குறித்து ஒரு வெளிப்படையான ஒவ்வாமையும் உள்ளார்ந்த ஒரு பெருவிருப்பும் உள்ளது என்பதை தமிழ் சினிமா குறித்த சமூகவியல் விளக்குவதாக உள்ளது. இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பைக்கொண்ட பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட ஒரு ஒன்றிய அமைப்பில் சினிமா ஒரு பொதுக் கருத்தியல் உற்பத்தி எந்திரமாக உள்ளது. குடிமக்களை குடியாண்மைச் சமூகத்திற்கு இயைபுபடுத்துவதாக, ஒரு பொது மனித, இன அடையாளத்தை உருவாக்கக்கூடியதாக உள்ளது. மற்ற கலைகளைவிட சினிமா உருவாக்கும் பாதிப்பு அதிகமானது. அதனால்தான் சினிமா ஒரு கலை அல்ல கலை போன்ற பிறிதொன்று, அதனை சினிமா அல்லது திரையா்க்கம் என்றே அழைக்க வேண்டும். இதன்பொருள் திரையாக்கம் என்பது கலை போன்று ஒரு புதிய அறிதல் வடிவம் என்பதே. நமது புறஉலகை அகஉலகின் திரையாக்கமாக மாற்றிய ஒன்றே சினிமாவின் உடலரசியல் வினை. அவ்வினையின் விளைவு, சினிமா ஒரு சமூகத்தை வடிவமைப்பதாக, புழங்குலகை வழக்குலகாக (actualized world) உருவமைப்பதாக உள்ளது. எளிமையாகச் சொன்னால், சினிமா எனும் திரையாக்கம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதில்லை, மாறாக, யதார்த்தத்தை கட்டமைக்கிறது மற்றும் உருவமைக்கிறது. பார்வையாளர் என்ற காணும் எந்திரங்களை தனது திரையாக்க காட்சி எந்திரம் வழியாக உருவாக்குகிறது. அவ்வகையில் சினிமா மற்ற துறைகளைவிட அதிக சமூகவியல், சமூக உளவியல், சமூக அரசியல் ஆய்விற்கு உட்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான ஒரு முன்முயற்சியே இத்தொகுப்பு.
Book Details
Book Title சினிமாத்துவம்: காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும் (cinemaththuvam)
Author ஜமாலன் (Jamaalan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 336
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மௌனியின் இலக்கியாண்மை - ஜமாலன் :பெரும்பான்மையானா வாசிப்புகள் மௌனியின் சிறுகதைகளில் கதையாடல்களின் கவித்துவத்தையும் வடிவ நேர்த்தியையும் விரித்துரைப்பனவாக அமைந்திருக்கின்றன...
₹126 ₹140
சினிமா ஆய்வாளர் ஜமாலன் அவர்களின் தலித் சினிமா: அழகியல், அரசியல், அறவியல், தமிழ் சினிமா சார்ந்த புத்தக உலகின் தேவையை நிரப்பும் முக்கியமான புத்தகம். கடந்த ஏழாண்டுகளில் குறிப்பாக தம்பி பா.ரஞ்சித் அவர்களின் அட்டக்கத்தி(2012)யின் வெற்றிக்குப் பிறகு தலித் சினிமா பற்றிய சொல்லாடல் தமிழ் சூழலில் விரிவும் ஆழம..
₹180 ₹200
குடியாண்மை சமூகம் (Civil Society) என்பது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக் கருத்தியலுடன் உறவு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் குடியாண்மைச் சமூகம் என்ற ஒன்று இங்குள்ள சனாதன வருண சாதியச் சமூகத்தை உடைத்து உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பு அல்ல என்பதை இந்நூல் புரியவைக்க முயல்கின்றது. இந்தி..
₹360 ₹400