Menu
Your Cart

நாக மண்டலம்

நாக மண்டலம்
நாக மண்டலம்
-5 %
நாக மண்டலம்
நாக மண்டலம்
நாக மண்டலம்
கிரீஷ் கர்னாட் (ஆசிரியர்), பாவண்ணன் (தமிழில்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு பெண், அவள் கணவன், ஒரு பாம்பு. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வசீகரமான புதிர்தான் கிரீஷ் கார்னாடின் நாக மண்டலம். பெண்ணின் கற்பு என்னும் கற்பிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த நாடகப் பிரதி பெண்ணின் பாலுறவுத் தேர்வு குறித்த நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கிறது. கார்னாட் இந்தக் கதையை நேரிடையாகச் சொல்லவில்லை. ஒவ்வொரு நாள் இரவும் ஒவ்வொரு வீட்டிலும் மனிதர்கள் படுக்கச் செல்வதற்கு முன் தீபங்களை அணைப்பார்கள். அதன் பிறகு அந்த தீபங்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே ஒன்றுகூடித் தமக்குள் உரையாடிக்கொள்வதாக ஒரு நம்பிக்கை கர்நாடகத்தில் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் கதையை அந்த தீபங்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதாக அந்த நம்பிக்கை நீட்சி அடைகிறது. தீபங்களின் உரையாடலாக இந்தக் கதையாடலைக் காட்சிப்படுத்துகிறார் கிரீஷ் கார்னாட். மரபுவழிப்பட்ட நம்பிக்கையின் துணை கொண்டு மரபார்ந்த சில நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
Book Details
Book Title நாக மண்டலம் (Nagamandalam)
Author கிரீஷ் கர்னாட் (Kireesh Karnaat)
Translator பாவண்ணன் (Paavannan)
ISBN 9788195978182
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Dec 2022
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Drama Play | நாடகம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அக்டோபர் 1997இல் பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் - சேனானி இருவரும் வீரப்பனால் கடத்தப்பட்டனர். ‘பெரிய ஆபிசர்க’ளெனத் தவறுதலாகக் கடத்தப்பட்ட அவர்கள் பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.கிருபாகர் - சேனானியிடம் “உங்க ரெண்டுபேரயும் நான் கிட்நாப் செஞ்சிருக்கேன்” என அடிக்கடி முற..
₹238 ₹250
மனம் வரைந்த ஓவியம்..
₹143 ₹150
புதைந்த காற்றுஇந்த எழுத்துக்களை அணுகும்போது முகம் சுளிக்கலாம் நீங்கள். மூச்சுத் திணறலாம் இவை உங்களை அச்சுறுத்தலாம்.பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற வார்த்தைகள் யாவும் அரசியலாகி விடுகின்றன. வேதனையைச் சுமப்பவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்” எனவேதா..
₹43 ₹45
படகோட்டியின் பயணம்அண்மையில் வெளிவந்த நவீனத்தமிழ் இலக்கியப் படைப்புகளில் கவனிக்கத்தக்க கவிதை, சிறுகதை, நாவல் கட்டுரைத் தொகுதிகள் மற்றும் ஆவணப்படங்கள் குறித்து நேர்த்தியான அணுகல்முறையில் எழுதப்பட்டுள்ள விமர்சனங்களின் தொகுப்புநூல்...
₹200 ₹210