Menu
Your Cart

கண்ணாடிச் சொற்கள்

கண்ணாடிச் சொற்கள்
-5 %
கண்ணாடிச் சொற்கள்
ஜி.குப்புசாமி (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மொழிபெயர்ப்பாளராகவே அதிகம் அறியப்பட்ட  ஜி. குப்புசாமியின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. குப்புசாமி விரிவான வாசிப்பும் பல்துறை சார்ந்த ஆழமான அறிவும் தேர்ந்த இலக்கிய ரசனையும் கூர்மையான இலக்கியப் பார்வையும் கொண்டவர். இலக்கியம், கிரிக்கெட், டென்னிஸ், திரையிசை, அரசியல் என அவர் ஆர்வத்தின் எல்லைகள் விரிந்து பரந்தவை. தான் ஆர்வம் செலுத்தும் எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டவர். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்த பார்வையைக் கொண்டிருப்பவர். தான் ரசித்துப் படித்த, பார்த்த, கேட்ட, வியந்த, கற்றுக்கொண்ட ஆளுமைகளையும் படைப்புகளையும் பற்றிக் குப்புசாமி விரிவாகவும் காத்திரமாகவும் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். உலக இலக்கியம்முதல் உள்ளூர் இலக்கியம் வரை; சார்வாகன்முதல் ஸரமாகோவரை; எஸ்.பி. பாலசுப்பிரமணியம்முதல் ரோஜர் ஃபெடரர்வரை எனப் பல்வேறு படைப்புகளையும் ஆளுமைகளையும் பற்றிய விரிவான சொற்சித்திரங்களைக் கொண்ட நூல் இது. மிகுதியும் அறிவுத் தளத்தில் நிதானமாக இயங்கும் குப்புசாமியின் எழுத்து தேவையான இடங்களின் உணர்ச்சிப் பிரவாகமாகப் பாயவும் செய்கிறது. இந்நூலில் இடம்பெறும் ஆளுமைகள், படைப்புகள் ஆகியவற்றை அறியாதவர்களுக்கு இவை சிறந்த அறிமுகங்களாக அமையும். ஏற்கெனவே அறிந்தவர்களுக்குப் புதிய திறப்புகள் சாத்தியமாகும்.
Book Details
Book Title கண்ணாடிச் சொற்கள் (Kannadi Sorkkal)
Author ஜி.குப்புசாமி (Ji.Kuppusaami)
ISBN 9789355232540
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 191
Published On Dec 2022
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் தி..
₹618 ₹650
துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த அதே கிர..
₹325
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகை..
₹808 ₹750
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்...
₹451 ₹475