-5 %
                                  
                          ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி
                    
          
			
			 
			 
				 
								ஸையித் இப்ராஹீம்  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹171
                 ₹180
                            - Year: 2013
 - Page: 320
 - Language: தமிழ்
 - Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
 
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                இந்நூல் பூர்வ ஆப்பிரிக்க சரிதைச் சுருக்கத்துடன் தொடங்கி, இஸ்லாமியக் காலத்தில் அக்லபிகள், இத்ரீஸிகள், தூலூனிகள், இக்க்ஷீதிகள், ஃபத்திமீகள், அய்யூபிகள் பற்றியும், பிறகு துருக்கியரின் ஆப்பிரிக்க வெற்றி, நெப்போலியன் படையெடுப்பிற்குப் பின்னர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் துன்பமடைந்து எகிப்து நாடு இறுதியில் விடுதலைபெற்ற சரிதை வரை கூறப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் மொத்த ஜனத்தொகையான 27 கோடியே 30 லட்சம் பேரில் 17 கோடிப் பேர் முஸ்லிம்கள் என்றும், இது 62 சதவீதம் எனவும் புள்ளி விவரங்களுடன் நூலாசிரியர் விவரித்துள்ளார். இவை தவிர, ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 38 ஆப்பிரிக்க நாடுகளில் 23 நாடுகள் முஸ்லிம் நாடுகள் என்றும், குடியாட்சிக் கொள்கையுள்ள இக்காலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கண்டத்தை முஸ்லிம் கண்டம் என்று ஏன் அழைக்கக்கூடாது? என்ற வினாவையும் தொடுத்துள்ளார். பிரெஞ்சுக் காலனி ஆட்சியிலிருந்த தஹோமீ, வோல்டா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் பிரெஞ்சு மொழி பேசும் கிறிஸ்தவர்களே கைப்பற்றியுள்ளனர். அதேபோல நைஜீரியாவிலும் 75 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர்; ஆனால், அங்கும் கிறிஸ்தவர்களின் ஆட்சியே நடக்கிறது. விரைவில் காலனி ஆட்சி அழிந்துவிடும். ஆப்பிரிக்காவில் படிப்படியாகக் குடியாட்சி வெற்றிபெற்று, அது ஒரு முஸ்லிம் கண்டம் என்று அழைக்கப்படும் என்பது உறுதி என்ற நம்பிக்கையுடன் நூலை முடித்துள்ளார்.
                              
            | Book Details | |
| Book Title | ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி (Africaavil Muslim Aatchi) | 
| Author | ஸையித் இப்ராஹீம் (Saiyidh Ipraaheem) | 
| Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing) | 
| Pages | 320 | 
| Year | 2013 |