Menu
Your Cart

சினிமா ரசனை

சினிமா ரசனை
-5 % Out Of Stock
சினிமா ரசனை
₹214
₹225
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய சினிமா, ஆங்கில மற்றும் உலக சினிமா, திரைப்படம் சம்மந்தப்பட்ட சில புத்தகங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிப்பு (மெதட் ஆக்டிங்), தமிழ் சினிமா, காமிக்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. இந்தத் தலைப்புகளில் உலகின் சில முக்கியமான நபர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் விரிவாக இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. புத்தகத்தை எழுதியிருக்கும் ‘கருந்தேள்’ ராஜேஷ், தமிழ்த் திரைப்படங்களில் ஒரு Screenplay Consultant. திரைக்கதைகளைப் படித்து, இயக்குநர்களுடன் விவாதித்து, அதைச் சிறந்த முறையில் செப்பனிட்டு, ஒரு முழுமையான திரைப்படமாக அதனை உருவாக்குவது இவரது பணி. திரைப்படக் கல்லூரிகளில் திரைக்கதை பற்றிய விரிவுரைகளையும் தொடர்ந்து ஆற்றிவருகிறார். ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற இவரது முந்தைய புத்தகம் மிகவும் பிரபலமானது. www.karundhel.com என்ற தனது வலைத்தளத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சினிமா பற்றி விரிவாக எழுதிவருகிறார் கருந்தேள் ராஜேஷ். தமிழ் இந்து நாளிதழில், ஒவ்வொரு வெள்ளியும் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இவைதவிர, தமிழ் இந்துவுக்காக ராஜேஷ் எழுதிய வேறு சில திரைப்படம் சார்ந்த கட்டுரைகளும் இதில் உள்ளன. திரைப்படம் என்பது நமக்குள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்த வல்லது என்ற முறையில், ஒரு திரைப்படத்தின் பல்வேறு அங்கங்கள், அவைகளை உருவாக்குபவர்கள், அவை தரும் உணர்வுகள் என்று மிக விரிவாக அலசி எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.
Book Details
Book Title சினிமா ரசனை (Cinema Rasanai)
Author கருந்தேள் ராஜேஷ் (Karundhel Raajesh)
Publisher தமிழ் திசை (THE HINDU Publication)
Pages 208
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒ..
₹209 ₹220
சிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எப்போதோ வந்த தமிழ்ப் படங்களில் துவங்கி புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களங்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. கடினமான மொழியில் இல்லாமல் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ..
₹323 ₹340