Menu
Your Cart

காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time

காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time
காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time
-5 %
காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time
₹284
₹299
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு, படைப்பில் கடவுளின் பங்கு, பிரபஞ்சத்தின் வரலாறு மற்றும் எதிர்காலம் போன்ற, அவர் கையாள்கின்ற சுவாரசியமான அறிவியல் விவகாரங்களும் நம் மனங்களைக் கட்டிப் போடுபவையாக இருக்கின்றன. ஆனால் அந்நூல் வெளியிடப்பட்டதிலிருந்து, அதில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான கோட்பாடுகளில் சிலவற்றைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்ததாகப் பேராசிரியர் ஹாக்கிங்கிற்கு வாசகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி, அந்நூலில் கையாளப்பட்ட அனைத்து விஷயங்களையும் எவரொருவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், சமீபத்திய அறிவியல் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் பற்றிய தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஹாக்கிங் படைத்துள்ள அற்புதமான நூல்தான் ‘A Briefer History of Time என்ற இந்நூல். இது ‘மிகச் சுருக்கமானதாக’ இருந்தாலும்கூட, உண்மையில், முந்தைய நூலின் மிக முக்கியமான அறிவியல் விவகாரங்களை இது அதிக விரிவாக விளக்குகிறது. குழப்பமான எல்லைச் சூழல்கள் குறித்த எண்கணிதம் போன்ற சிக்கலான கோட்பாடுகள் அகற்றப்பட்டுவிட்டன. அவற்றுக்குப் பதிலாக, முந்தைய நூல் நெடுகிலும் இழையோடிய மிகவும் சுவாரசியமான, ஆனால் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்த சார்புக் கோட்பாடு, வளைவான வெளி, குவாண்டம் கோட்பாடு போன்ற அறிவியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Book Details
Book Title காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time (Kalathin miga surukkamana oru varalaru | A Briefer History of Time)
Author ஸ்டீபன் ஹாக்கிங்
Translator நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 200
Published On Oct 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Science | அறிவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்வும் பணியும் - தமிழில்: பேரா ச.வின்சென்ட் : ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்..
₹361 ₹380
கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் ம..
₹380 ₹400
பணக்கார தந்தை ஏழைத் தந்தைகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் ம..
₹474 ₹499
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்..
₹238 ₹250