Menu
Your Cart

அஞ்சறைப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி
-5 %
அஞ்சறைப் பெட்டி
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவிய எளிமையான, சிறிய மருந்தகமாக விளங்கிக் கொண்டிருந்தது சமையலறையின் அஞ்சறைப் பெட்டி. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் சிறுசிறு உபாதைகளை அஞ்சறைப் பெட்டி பொருள்களைக்கொண்டே போக்கிக்கொண்டிருந்தனர் சென்ற தலைமுறை வரை. `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ போன்ற முதுமொழிகள், நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்று போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் மகத்துவம் கொண்டவை என்பதை உணர்த்துகின்றன. உதாரணமாக ‘அதிகமாக மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தும் இந்தியர்களைவிட, அமெரிக்கர்களுக்கு மூன்று மடங்கு பெருங்குடல் புற்றுநோய் (Colon cancer) வருவதற்கான அபாயம் உண்டு. மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்றவை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகின்றன’ என்ற இந்தத் தகவல், நம் பாரம்பர்ய உணவுப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகிறது. மிளகு, சீரகம், இஞ்சி போன்ற இயற்கை நறுமணமூட்டிகள் உணவுக்குச் சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்குபவை. இப்படிப்பட்ட பொருள்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கி, அவள் விகடனில் வெளிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது. அஞ்சறைப் பெட்டியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள்!
Book Details
Book Title அஞ்சறைப் பெட்டி (anjaraipetti)
Author டாக்டர் வி.விக்ரம்குமார்
ISBN 9789388104432
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நம் வீடுகளிலும் புல்வெளிப்பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கான கைகண்ட மருந்து, அதேபோல நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல நறுமணப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை அனைத்துமே தாவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் பயன்களையு..
₹143 ₹150
பொதுவாக நோயாளிகளின் ஊட்டத்திற்காக பழங்களை வாங்கிச் செல்வது நமது வழக்கம். ஆனால் உண்மை என்னவென்றால், பழங்களை தொடர்ந்து வாங்கிச் சுவைத்திருந்தால், அவர்களுக்கு நோயே ஏற்பட்டிருக்காது...
₹133 ₹140
’சுவை பட உண்…’ நூல் தலைப்பில் புதுமை இருப்பதைப் போல, உள்ளிருக்கும் உணவுகளிலும் நிறையவே புதுமை இருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு ரகங்களின் பெயர்களை முதலில் படிக்கும் போது, வாய்க்குள் நுழைவதற்கே கடினமாக இருந்தது! அதாவது வெவ்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகளைத் தொகு..
₹76 ₹80