-5 %
பாரதியின் தராசு
ய.மணிகண்டன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789361106699
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது தராசுக் கடை வைத்து ‘வியாபாரம்’ செய்துவந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியல்லவா? ஆனால் அவர் பயன்படுத்திய தராசு கண்ணுக்குத் தெரியாத மாயத் தராசு; ஞானத் தராசு.
பாரதியார் 1915இல் எழுதத் தொடங்கிய உரைநடைத் தொடர் ‘தராசு’ என்னும் தலைப்பில் 1918வரை அவ்வப்போது ‘சுதேசமித்திர’னில் வெளிவந்தது. பத்திரிகைத் துறையில் பாரதி மேற்கொண்ட ‘பத்தி’ எழுத்து வகையின் முன்னோடி முயற்சி இது.
தமிழ்ச் சமூக, இந்திய, உலக நடப்புகளெல்லாம் ‘தராசு’ தொடர் வாயிலாக வாசகர் நெஞ்சில் பதிந்தன. பாரதிதாசனைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் இந்தத் தொடர்தான்.
நூற்றாண்டு இடைவெளிக்குப் பின் பாரதியின் ‘தராசு’ காலநிரலில், ‘சுதேசமித்திரன்’ மூலத்தின் அடிப்படையில், கண்டறியப்பட்ட புதிய பகுதிகளோடு, ஒரே தொகுதியாகப் பாரதி அறிஞர் ய. மணிகண்டனின் தேர்ந்த பதிப்பில் இப்போது முதன்முறையாக வெளிவருகிறது.
| Book Details | |
| Book Title | பாரதியின் தராசு (Bharathiyin tharasu) |
| Author | ய.மணிகண்டன் |
| ISBN | 9789361106699 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, ஆய்வு நூல், 2025 New Arrivals |