Menu
Your Cart

கினோ (பாகம் 1)

கினோ (பாகம் 1)
-5 %
கினோ (பாகம் 1)
க்றிஸ்டோபர் கென்வொர்தி (ஆசிரியர்), தீஷா (தமிழில்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சினிமாவைத் திரைப்படக் கல்லூரிகளுக்கும் செல்லாமல், உதவி இயக்குனராகவும் இல்லாமல் கற்றுக்கொள்கிற சாத்தியத்தை இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. சினிமா யதார்த்த வாழ்க்கையை ஒட்டியிருக்க வேண்டும். அறிவியல் புனைவு திரைப்படம் எடுத்தாலும், அதில் மானுட அவலங்களும், உணர்வு ரீதியான விசாரணைகளும் இருந்தால்தான், அது பார்வையாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த முடியும். சினிமா என்ற கலையைப் பொறுத்தமட்டில் என்ன சொல்கிறோம்? அதை எப்படிச் சொல்கிறோம்? என்பதே அடிப்படை. இதில் இரண்டாவதுதான் இயக்குனருக்கான அடையாளம். ஒரு காட்சிக்கு எந்த இடத்தில் கேமராவை வைக்கிறார் என்பதைப் பொறுத்து அவர் சிறந்த இயக்குனரா? இல்லையா? என்பதைச் சொல்லிவிட முடியும். ஒவ்வொரு காட்சிக்குமே ஒருவித மனோநிலை இருக்கிறது. அது படம்பார்ப்பவர்களுக்குச் சரியாகக் கடத்தப்பட வேண்டும். கேமராவைத் திறம்படக் கையாளத் தெரிந்தவர்களுக்கு இது சாதாரண விஷயம். கேமராவின் ஒவ்வொரு அசைவிற்குமே திரையில் ஒரு அர்த்தம் உருவாகிறது. உங்களுக்கு, கேமரா பேசுகிற மொழியைப் புரிந்துகொள்ள ”கினோ” உதவியாக இருக்கும். இதில் சரியாக 100 நவீன கேமரா நுட்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஷாட்டிற்கு எப்படி கேமராவை நகர்த்த வேண்டும், அசைக்க வேண்டும், இயக்க வேண்டும் என்பதற்கான புரிதல் இந்தப் புத்தகத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும். ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை, கதை, என சினிமாவின் பிற கூறுகள் பற்றி பெரும்பாலான புத்தகங்கள் வந்திருந்தபோதும், டைரக்‌ஷன் குறித்து வெளியாகிற மிக முக்கியமான புத்தகம் இது.
Book Details
Book Title கினோ (பாகம் 1) (kino-pesamozhi-pathippagam-10014294)
Author க்றிஸ்டோபர் கென்வொர்தி
Translator தீஷா (Theeshaa)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 0
Year 2018
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

திரைப்படத் துறையில் நேரடியாக பயிற்சியில்லாதவர்களுக்கு, சினிமாத் துறை எப்படி இயங்குகிறது, அதன் தயாரிப்பு நிர்வாகம் எம்முறைகளில் செயல்படுகிறது என்ற குழப்பம் இருக்கும். அடுத்து, குறைந்த பட்ஜெட்டை, அதுவும் தன்னுடைய சொந்த முதலீடாக உள்வைத்து படமெடுக்கையில், ஏற்கனவே போதிய திரைப்படத் துறை அனுபவமும் இல்லாதிர..
₹143 ₹150
துடிப்பான மற்றும் பிரகாசமான வண்ணங்கள் ஒலியைக் காட்டிலும், உங்கள் கவனத்தைப் பிடித்து இழுக்கும் பலம் வாய்ந்தவை. படத்தின் மையக்கருத்தானது, ஒவ்வொரு ஷாட்டிலும் வெளிப்படுகிறது. காட்சியில் வண்ணங்களைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அழகியல் தேர்வாக இருந்தாலும், அவை பார்வையாளர்களின் பல்வேறுபட்ட மனநிலை மற்றும..
₹428 ₹450