Menu
Your Cart

ஐந்தாம் மலை

ஐந்தாம் மலை
ஐந்தாம் மலை
-5 %
ஐந்தாம் மலை
ஐந்தாம் மலை
ஐந்தாம் மலை
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ. பவுலோ கோய்லோ பிரேசில் நாட்டில் பிறந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளர். 1947 ஆகஸ்ட் 24 ஆம் நாளில் பிறந்த இவருக்கு இந்திய சுதந்தரத்தின் வயதாகிறது. முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ரசவாதி அவரை உலக எழுத்தாளராக மாற்றியது. அதன் விற்பனை உலக மொழிகள் பலவற்றிலுமாக விரிவுற்றபோது வாழும் எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு என்ற அளவில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியது. ஐந்தாம் மலை என்ற இந்த நாவல் விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது. பவுலோ கோய்லோ வாசகனை மெல்ல மெல்லத் தன் புனைவுகள் வழி சிந்திக்க வைப்பதைக் கலையாக மேற்கொள்கிறார். இந்தத் தத்துவப் பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் முனைவர் ச. வின்சென்ட். ஆங்கிலப் புலமையும் தமிழில் திறனும் பெற்ற பேராசிரியர் வின்சென்ட் புகழ்பெற்ற பல நூல்களை ஆங்கிலம் வழி தமிழுக்குத் தந்த பெருமைக்குரியவர். மதுரை அருளானந்தர் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பரமார்த்த குருவின் கதை, பிரதாப முதலியார் சரித்திரம் ஆகிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஃப்ராய்ட், ஸ்டீபன் ஹாக்கிங் வரலாறுகளைத் தமிழில் தந்திருக்கிறார். வான்காரி மத்தாய், சினு அச்பி, சிகோமெண்டிஸ் ஆகிய புகழ்வாய்ந்த எழுத்தாளர் நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
Book Details
Book Title ஐந்தாம் மலை (Aintham malai)
Author பாவ்லோ கொய்லோ (Paavlo Koilo)
Translator பேரா.ச.வின்சென்ட் (S.Vincent)
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 236
Year 2019
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள். ஒருவனுடைய உதடுகள்..
₹285 ₹300
உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்...
₹285 ₹300
ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம் பெற்றார். இந்தியாவில் உள்ள ப்னாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய த..
₹379 ₹399
வாழ்வும் பணியும் - தமிழில்: பேரா ச.வின்சென்ட் : ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்..
₹550