Menu
Your Cart

அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?

அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?
-5 %
அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாகேஸ்வரி அண்ணாமலை ‘அமெரிக்காவின் மறுபக்கம்: ஒரு சமூகப் பொருளாதாரப் பார்வை’ என்னும் நூல் மூலம் அமெரிக்கா குறித்த மாற்றுப் பார்வையையும் சமகால இயங்குவெளி அசைவியக்கத்தையும் புதிய நோக்கில் வெளிப்படுத்தியவர். அதன் நீட்சியாக ‘அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?’ என்னும்இந்த நூல் மூலம் தமிழ் பொதுப்புத்தியில் ஒரு புதிய உரையாடலையும் மாற்றுக்கான களங்களையும் அறிமுகப்படுத்துகிறார். உலகிலுள்ள ஜனநாயக நடைமுறைகளில் அமெரிக்க ஜனநாயகமே சிறந்தது என்னும் ஆதிக்கக் கருத்தியல் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்காவை மையப்படுத்தி ஜனநாயகத்திற்கு விளக்கம், பொருள்கோடல் செய்யும் போக்குக் காணப்படுகிறது. இந்த நடைமுறைப் போக்குகளுக்கு மாற்றாக நாகேஸ்வரி இந்த நூலில், அமெரிக்காவின் வாக்குரிமை வரலாறு, தேர்தல்முறை, எதிர்பாராத விளைவுகள், தேர்தல் தோல்வியும் புரட்டுகளும் போன்ற தலைப்புகளில் புதிய பார்வையை நமக்குக் காட்சிப்படுத்துகிறார். இதன் மூலம் அமெரிக்க அரசியல் ஜனநாயக நடைமுறைகள், மேலைநாட்டு ஜனநாயகப் பண்பாடுகள் ஆகியவற்றின் மீது ஒரு புறவய உரையாடலை எளிய நடையில் நம்மிடம் சொல்வது புதிய அனுபவமாய் இருக்கிறது. சமகால அரசியல் வாசிப்புக்கு அரியதொரு முயற்சி. மாற்றுச் சிந்தனையிலும் சமூகச் செயல்பாட்டிலும் அக்கறையுள்ளோர் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம். - தெ. மதுசூதனன், சமூகச் செயற்பாட்டாளர்
Book Details
Book Title அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா? (America jananayagathuku aabatha?)
Author நாகேஸ்வரி அண்ணாமலை (Nageswari Annamalai)
ISBN 978 81 7720 347 9
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 80
Year 2023
Edition 1
Format Paper Back
Category International Politics | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அற..
₹219 ₹230
பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக இருக்கிறது, திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் நினைப்பதன் விளைவு என்ன, இதனால், திருமண வாழ்வில் பெண்கள..
₹257 ₹270
கார்டினல் ஹோர்கே மரியோ பெர்காகிலியோ 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு போப் பிரான்சிஸ் ஆகிறார். இவர் எங்கு பிறந்தார்? எங்கு படித்தார்? என்று ஆரம்பித்து தற்போதைய அவரது இறைப் பணி வரை தெளிவாக அனைவரும் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் தொகுத்தெழுதியுள்ளார் நூலாசிரியர்...
₹190 ₹200
நம் கலாச்சாரத்தில் நம்மை நாமே கேலியாகப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் ஏராளம். கலாச்சார முடிச்சுகளை நாராயண் கதைகள் சிரித்துக் கொண்டே இறுக்கும் பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்க்கும். நம்மிடமிருந்து விலகி நின்று நம்மையே கேலியாகப் பார்த்துக்கொள்ள ஒருவகைச் சிந்தனைத் திறன் வேண்டும் ..
₹375 ₹395