Menu
Your Cart

அப்பாவின் நிழல்

அப்பாவின் நிழல்
New -5 %
அப்பாவின் நிழல்
நெஜாத்தி ஒஸ்ஸிரி (ஆசிரியர்), கௌரி (தமிழில்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தனது அடையாளத்தைக் கண்டடைவதே ஒரு மனிதனின் தேடல். அந்த அடையாளம் புலப்படாதபோது அவன் சந்திக்கும் உளச் சிக்கல்களே இந்த நாவலின் பேசுபொருள். தன்னைத் தேடி வராத தந்தைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அர்தா கடிதம் எழுதத் தொடங்குகிறான். அவனுக்கும் அவன் தந்தைக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இடது கண்ணுக்குக் கீழே இருவருக்கும் இருக்கும் மச்சம் மட்டும்தான். வேறு எந்த அடையாளத்தையும் அவன் தந்தை அவன் வாழ்வில் விட்டுச் செல்லவில்லை.

துருக்கியிலிருந்து ஜெர்மனி வரை பரந்து விரிந்திருக்கும் தன் குடும்ப வரலாற்றை நம் கண்முன்னே நிறுத்துகிறான் அர்தா. இரண்டு நாடுகளிலுமே தங்களுக்குரிய இடத்தைக் கண்டடைய முடியாத தவிப்பு, நட்பின் வழியே கிடைத்த புகலிடம், இளைஞனாக அவன் எதிர்கொள்ளும் ஆபத்துகள் ஆகியவற்றை இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது. சில நேரங்களில் நகைச்சுவையாகவும், பல நேரங்களில் நெஞ்சை உலுக்கும் வகையிலும் கோபமும் தத்துவமும் நிறைந்த செழுமையான நாவலாக இது மிளிர்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மொழியால் நம்மையும் நாம் நேசிப்பவர்களையும் எவ்வாறு தாங்கிப்பிடிக்க முடியும் என்பதைக் காட்டும் வகையில் இலக்கியத்தின் சான்றாகவும் இந்த நாவல் திகழ்கிறது.

நெஜாத்தி ஒஸ்ஸிரியின் முதல் நாவல் இது.

Book Details
Book Title அப்பாவின் நிழல் (Appaavin Nizhal)
Author நெஜாத்தி ஒஸ்ஸிரி (Nejaaththi Ossiri)
Translator கௌரி
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2026
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha