Menu
Your Cart

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: அன்றாட வாழ்வில் அறிவியல்

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: அன்றாட வாழ்வில் அறிவியல்
-5 %
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: அன்றாட வாழ்வில் அறிவியல்
ஹேமபிரபா (ஆசிரியர்)
₹116
₹122
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நானே ஒரு விஞ்ஞானியாக உணர்கிறேன்! ‘...இந்து தமிழ் திசை’ இணைப்பிதழில் அறிவுக்கு ஆயிரம் கண்கள் தொடர் வெளியானபோது, வாசகர் அனுப்பியிருந்த ஜூன் 3,2021 கடிதத்தில் இருந்து: ‘‘...ஒவ்வொரு கட்டுரையை வாசித்தபோதும் நான் மேலும்மேலும் குதூகலம் அடைந்தேன். ஏனென்றால், அன்றாட வாழ்க்கையில் சின்னசின்ன விஷயங்களை எல்லாம் நாம் கவனிப்பதே இல்லை. உதாரணமாக, எப்போது மிக்ஸர் பாக்கெட் வாங்கினாலும், அதை குலுக்கிக்குலுக்கி நிலக்கடலையை மட்டும் தனியாக எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத்தான் தம்பியிடம் தருவேன். ‘பிரேசில் நெற்று விளைவினால்’தான், பாக்கெட்டைக் குலுக்கினால் நிலக்கடலை மேலே வருகிறது என்பது தெரியாமலேயேதான் இவ்வளவு காலமும் இதைச் செய்துகொண்டிருந்தேன். இனி, யார் அப்படிச் செய்தாலும் இதன் பின்னணியில் இருக்கும் அறிவியலை அவர்களுக்குக் கூறுவேன். இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போதெல்லாம் நானே ஒரு விஞ்ஞானிபோல உணர்கிறேன். அதனால், செய்தித்தாளின் பக்கங்களை வெட்டி, என் வீட்டுக் குட்டி நூலகத்தில் ஒட்டிவைத்திருக்கிறேன்...’’ - காஞ்சனா, வாசகர். மொழிவழி திறக்கும் அறிவியற் கண்கள் ‘‘...ஹேமா, எளிய அன்றாடத் தருணங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றின் வழியே ஆர்வத்தைத் தூண்டி, அந்நிகழ்வுகளுக்கு அடிப்படையாக இருந்த அறிவியலை விளக்குவார். பின்னர் அதே அறிவியல் எப்படி எளிய விசயங்களைத் தாண்டி பெரிய பெரிய காரியங்களிலும் தொழில்நுட்பங்களிலும் பயன்படுகிறது என்பதை விளக்கியிருப்பார். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் வார்ப்புரு இதுவே. அறிவியலில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல். குறிப்பாக, குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பிருப்பின் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்படவும் தகுதி படைத்த கட்டுரைகள்...’’ - கார்த்திக் பாலசுப்ரமணியன், எழுத்தாளர்
Book Details
Book Title அறிவுக்கு ஆயிரம் கண்கள்: அன்றாட வாழ்வில் அறிவியல் (arivukku-aayiram-kangal)
Author ஹேமபிரபா
ISBN 9789393830128
Publisher பயில் பதிப்பகம் (payil-pathipagam)
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எல்லா குழந்தைகள் போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்துபதினோரு வயதில் எப்படி குழந்தை உருவாகிறது என்ற கேள்வியை எழுப்பினாள். எவ்வளவோ சந்தேகங்கள். தாயின்வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்’ உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகி விடாதா? இப்படி பற்பல கேள்விகள். எனக்குத் தெரிந்த பலர் இந்த கேள்..
₹43 ₹45