Menu
Your Cart

அட்சரேகை

அட்சரேகை
New -5 %
அட்சரேகை
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

-அட்சரேகை

கானலை நதி என்று நினைத்து நீந்தியவர்கள், அவர்களை ஆதரிசமெனக் கொண்டு நீந்த இறங்கியவர்களின் கதைகளும் கிளைக்கதைகளுமாக விரிகிறது கார்த்திக் பாலசுப்ரமணியனின் அட்சரேகை. இதில் இளமைக்கே உரிய வழக்கமான இலட்சியங்கள் பொருளிழக்கின்றன; அவற்றை நோக்கி நடையாய் நடந்த பாதை களிலும் ஒளி அவிந்துவிடுகிறது. பின் மிஞ்சுவது நினைவுகள் மட்டுமே. நினைவுகளில் செதுக்கிவைத்திருப்பவர்கள் புனைவின் கடைசிப் பக்கம் வரையிலும் உயிர்ப்புடன் வருகிறார்கள். ஏதேதோ திசைகளிலிருந்து, எதிர்பாராத திருப்பங்களிலிருந்து, சிலர் மறைந்த பின்னும், ஏன் செத்த பின்னும்தான்.

நினைவுகளோடு கலந்துவரும் பல்வேறு இடவெளிகளின் குவிமையமாகிறது ஒரு சிறிய அறை. அரசு வேலைகளுக்கான தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கு அவர்களது போராட்டங்களின், வீழ்ச்சிகளின், காயங்களின் சாட்சியாக இருக்கும் அறை. கதையை நகர்த்திச் செல்லும் சமூக, பொருளாதார வரலாறுகளை அந்த அறை பார்க்கிறது. அதன் கண்களோடு வாசகர் தன் கண்களைச் சேர்த்து இமைக்கக் கேட்கிறது.

கார்த்திக்குக்கு அநாயாசமாய் வசப்பட்டிருக்கும் யதார்த்த அழகியலோடு கூடவே சிதறுண்ட உணர்வுகளின் வண்ணங்களும் துல்லியமான விவரணைகளும் கதாபாத்திரங்கள் அடையும் பரிணாமங்களும் நாவலின் வலுப்புள்ளிகள். வாசகரை அவை பிரதிக்குள் இழுத்துப்போடுகின்றன.

Book Details
Book Title அட்சரேகை (Atcharaekai)
Author கார்த்திக் பாலசுப்ரமணியன் (Kaarththik Paalasupramaniyan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2026
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha