Menu
Your Cart

அழகின் அசைவு: பண்பாட்டு கட்டுரைகளின் முழுத்தொகுப்பு

அழகின் அசைவு: பண்பாட்டு கட்டுரைகளின் முழுத்தொகுப்பு
-5 %
அழகின் அசைவு: பண்பாட்டு கட்டுரைகளின் முழுத்தொகுப்பு
தொ.பரமசிவன் (ஆசிரியர்)
₹280
₹295
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. அவர்களின் பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விதந்து சொல்லவேண்டியதில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் ஒரு காலத்தில் சமயக் குருமார்களாக இருந்த வரலாற்றுச் சுவடுகள், மொட்டையடித்தல் என்னும் பௌத்த வழி வழக்கத்தின் தொடர்ச்சி, சமண நியாய பரிபாலனப் பெரும்பள்ளி பகவதி அம்மன் கோயிலாக வழிபடப்படுதல், வைணவ வழிபாட்டில் வைதிகத் ‘தூய்மை’ கடந்த வெகுமக்கள் பண்பாட்டு ஏற்பு, வள்ளி மணாளன் முருகன் பெருஞ்சமயச் சார்புற்றுச் சண்முகன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்றெல்லாம் ஆன காலத்தில் தெய்வானை சேர்ந்த கதை, துலுக்க நாச்சியார் அழகரின் காதலியான கதை, தாய்த்தெய்வ வழிபாட்டின் செல்வாக்குக் கத்தோலிக்கத் தேவமாதாவிடம் புலப்பட்ட வரலாறு, தைப்பூசத்தில் தமிழ்ப் புத்தாண்டு காணுதல் எனச் சாதிகள், சமயங்கள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என்னும் பண்பாட்டின் பொதுப் பெரும் போக்குகள் ஒருபுறம். உலையிலேயே உப்புப் போடுதல், உப்பைத் தனியே உணவுடன் சேர்த்தல் என்னும் தமிழர் வழக்கங்களில் சமூகப் படிநிலைகள், தமிழகத்தின் இயல்பான தின்பண்டங்கள், வந்து புகுந்த அல்வா முதலியவை, இயல்பாக உடுப்பவை இரண்டுடன் புடைவை முதலியன வந்து புகுதல், உரல் உலக்கை முதலிய புழங்கு பொருட்கள், உறவுப் பெயர்களில் பொதிந்திருக்கும் மரபு, தவிட்டுக்குத் தத்தெடுக்கும் வழக்கம், பேரப்பிள்ளைகளுக்கும் சடங்குகளில் இடமிருத்தல், இறப்பிலும் விருந்தோம்பல், கருவுற்ற பெண் கணவனை இழந்த நிலையில் அதனை அறிவிக்கும் நாகரிகக் குறியீட்டுச் சடங்கு, மரபார்ந்த பல்லாங்குழி முதலிய விளையாட்டுகளின் சமூக- பொருளாதாரப் பின்னணி என உணவுகள், உடைகள், விளையாட்டுகள் என அன்றாடங்களின் பண்பாட்டு அமிசங்கள் மறுபுறம். இன்னும் இன்னும் எத்தனையோ! அவரது அனைத்துப் பண்பாட்டுக் கட்டுரைகளின் பெருந்தொகுப்பாக வாய்த்த இந்நூல் அறிஞர்களுக்கு ஆய்வுத் துல்லியம்; ஆய்வாளர்களுக்குக் கருதுகோள் களஞ்சியம்; பொதுவாசகருக்கு முன்னறியாப் பல்சுவை விருந்து. பா. மதிவாணன்
Book Details
Book Title அழகின் அசைவு: பண்பாட்டு கட்டுரைகளின் முழுத்தொகுப்பு (Azhakin Asaivu)
Author தொ.பரமசிவன் (Tho.Paramasivan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category தமிழர் பண்பாடு, Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, Culture | பண்பாடு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப..
₹86 ₹90
பண்பாட்டு அசைவுகள்‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச..
₹119 ₹125
நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கி..
₹57 ₹60
செவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று..
₹171 ₹180