Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

சந்திரஹாசம் - Chandrahasam - Tamil

சந்திரஹாசம் - Chandrahasam - Tamil
-5 % Out Of Stock
சந்திரஹாசம் - Chandrahasam - Tamil
We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of upto 1 week in processing and shipping of orders. Thank you for your understanding.!
சு.வெங்கடேசன் (ஆசிரியர்), கே.பாலசண்முகம் (ஓவியம்)
₹1,424
₹1,499
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.





தென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் பின் அவனது மகன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் அமர்ந்தான். அவனது காலத்தில் பாண்டிய நாடு புகழின் உச்சியை அடைந்தது. சோழமண்டலம், கொங்கு தேசம், தொண்டை நாடு, கொல்லம், நெல்லூர், இலங்கை வரையிலான பகுதி அவனது ஆளுகையின் கீழ் இருந்தது. அவன் முக்கடலையும் ஆளும் சக்கரவர்த்தியாக விளங்கினான். அவனது ஆட்சி காலத்தில் தான் சீனப் பேரரசர் குப்ளாக்கானின் தூதுவனாக மார்க்கோ போலோ பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தான். பாண்டிய நாட்டைப் பற்றியும், மதுரையின் செல்வச் செழிப்பைப் பற்றியும் வியக்கத்தகு முறையில் ஒரு நேரடி வர்ணனையைப் பதிவு செய்தான் மார்க்கோ போலோ. குலசேகர பாண்டியனின் காலத்தில் நடந்த இலங்கைப் போர் குறிப்பிடத்தகுந்தது. போரில் வெற்றிபெற்று அங்கு இருந்த புத்தபிரானின் புனிதப்பல்லை மதுரைக்கு எடுத்து வந்தனர். அதன் பின்னர் இலங்கை வேந்தன் பராகிரமபாகு வந்து இறைஞ்சிக் கேட்டு அப்புனிதப்பல்லை பெற்றுச் சென்றான். நீண்டகாலம் புகழ்மிகு ஆட்சியை நடத்திய குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மனைவியின் மகன் சுந்தரபாண்டியன். இரண்டாம் மனைவியின் மகன் வீரபாண்டியன். அறிவுத்திறனும், ஆற்றலும் ஒருங்கே கொண்டவனாக வீரபாண்டியன் திகழ்கிறான் எனக்கருதி மன்னன் எடுத்த முடிவுகள் சுந்தரபாண்டியனை பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது. அவன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மாபாதகச் செயலைச் செய்யத்துணிந்தான். குடும்பத்துக்குள் உருவான மோதல், ஒரு பெரும் பேரரசையே வரலாற்றில் இருந்தே அப்புறப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியது. புகழின் உச்சத்தைத் தொட்ட ஒரு தேசத்தின் மீது துயரத்தின் காரிருள் சூழ்ந்தது. அத்தகைய சூழலிலும் துரோகத்தையெல்லாம் மிஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளிவீசியது ஒரு மாவீரனின் வீரசாகசம். பாண்டியர்களின் குலவாள் சந்திரஹாசத்தில் பட்டுத்தெறிக்கும் ஒளியில் இருந்து அந்த மகத்தான வீரக்கதை எழுதப்பட்டது. அந்தக்கதையே “சந்திரஹாசம்”.



Book Details
Book Title சந்திரஹாசம் - Chandrahasam - Tamil (Chandrahasam Tamil)
Author சு.வெங்கடேசன் (S.Venkatesan)
Illustrator கே.பாலசண்முகம் (K. Balashanmugam)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Oct 2015
Year 2015
Edition 1
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காவல் கோட்டம் - சு.வெங்கடேசன் :(நாவல்):ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது,அரசியல்,சமூகவியல்,இன வரைவியல் கண்ணோடங்களுடன்,அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,தீவிரமான தருணங்களையும்,திரும்பி பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.புதிய உத்திகள் தேர..
₹850
வேள்பாரி - சு.வெங்கடேசன்:தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட ப..
₹1,800
பாட்டி சொல்லும் கதை வழி, ஒரு குழந்தை ஒரு செய்தியை அறிந்துகொள்கிறது. அதுபோல் இன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, செல்போன் என பல ஊடகங்கள் வழியாக அறிந்துகொள்கிறோம். புதைந்திருக்கும் வரலாற்றுக் கதைகளும்... கதைகளாக சொல்லப்படும் வரலாற்று உண்மைகளும் இன்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது ஓர் எ..
₹166 ₹175
வைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களி..
₹200 ₹210