Menu
Your Cart

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்
-5 %
தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்
₹333
₹350
  • Edition: 2
  • Year: 2022
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல் வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. யார் இந்த ராமாமிர்தம் ? மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராக நடகம் நடத்தி வந்தார் மூவலூர் அம்மையார். இந்துமத வெறியர்கள் நாடக மேடை ஏறி அவரது கூந்தலை அறுத்து எறிந்தனர். இதற்கெல்லாம் அஞ்சாத அம்மையார் தன் பிறகு தனது கொள்கைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினாரே தவிர நிறுத்தவில்லை. இந்து சனாதனிகளுக்குப் பதில் சொல்லும்விதமாக தன் இறுதிக்காலம் வரை தனது முடியை கிராப் செய்தே வாழ்ந்திருக்கிறார். 1936 ஆம் ஆண்டில் திராவிடர் இயக்க முன்னோடி களில் ஒருவரான மூவலூர் இராமமிர்தத்தம்மாள் எழுதிய நாவல் “தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்”. இந்நாவலுக்கு தன்னுரை எழுதிய இராமமிர்தத்தம்மாள் இவ்வாறு கூறுகிறார்: “இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கை யில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதோடு, மனைவி மக்களையும் திண்டாடச் செய்யும் வாலிபர் களின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும்” என்பதே, இந்நாவலின் குறிக்கோள்.
Book Details
Book Title தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர் (daasigal-mosavalai-allathu-mathipetra-minor)
Author மூவலூர் ஆ.இராமமிர்தம் (Moovaloor Aa.Iraamamirdham)
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Published On Aug 2022
Year 2022
Edition 2
Format Paper Back
Category Novel | நாவல், Women | பெண்கள், Feminism | பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய இஸ்லாமும் இந்தியர் நிலையும்" என்ற சிறு பிரசுரத்தின் மறு பதிப்பு இது. மூவலூர் அம்மையாரின் வாழ்வும் பணியும் குறித்து தகவல்கள் சேகரிக்கும் போது கிடைத்த பொக்கிஷம் இச்சிறு புத்தகம். திராவிட இயக்கப் போராளியான அம்மையார் இச்சிறு பிரசுரம் எழுத..
₹29 ₹30