Menu
Your Cart

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்
New -5 %
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்
அம்பேத்கர்/B.R.Ambedkar (ஆசிரியர்)
₹1,140
₹1,200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மக்களை நேசித்த மாபெரும் தலைவர்களை சாதி அடையாளத்துக்குள் சுருக்கும் துயரம் நம் தேசத்தில் மட்டுமே நிகழ்கிறது. டாக்டர் அம்பேத்கருக்கும் அதுவே நிகழ்ந்தது. இந்தியாவுக்கே ஒளிவீசும் அறிவுச்சூரியனாக இருந்த அவரின் பெருமைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரியாதபடி மறைக்கப்பட்டன என்றே சொல்ல வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் வெறும் தலித் தலைவரா? இல்லை... இல்லை... இல்லை. வெளிநாடு போய்ப் படித்து இரண்டு டாக்டர் பட்டங்களைப் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர். 69,000 புத்தகங்களுடன் அவர் வைத்திருந்த நூலகம், இந்தியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமாக இருந்தது. ஓயாமல் படித்த அவர், தன் கல்வியையும் சிந்தனைகளையும் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகவே பயன்படுத்தினார். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை உரிமை கிடைக்கக் காரணமாக இருந்தவர்; தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றுத்தந்தவர்; பெண்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஆண்களுக்கு இணையான ஊதியமும் கிடைக்கக் காரணமாக இருந்தவர்; இந்தியாவில் ரிசர்வ் வங்கி அமைய அடித்தளமிட்டவர்; பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிப் பெருங்கனவு கண்டவர். மின்சாரத்தை எல்லோருக்கும் பயன்படும் வசதியாக ஜனநாயகப்படுத்தியவர்; தலித்துகள் மற்றும் பழங்குடியினர் போல பிற்படுத்தப்பட்டோரும் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று போராடியவர்; பெண்களுக்குச் சொத்துரிமையும் பிற உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று போராடி அதற்காகவே தன் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தவர். அந்த மகத்தான ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல் இது. தமிழகத்தில் இருக்கும் அம்பேத்கர் சிந்தனையாளர்கள் தொடங்கி சர்வதேச அளவில் அம்பேத்கரின் அரசியலை ஆய்வு செய்பவர்கள் வரை பங்களித்திருப்பது இந்த நூலின் சிறப்பு. தமிழ் வாசகர்கள் மத்தியில் அம்பேத்கர் பற்றிய உன்னதமான ஓர் உரையாடலைத் தோற்றுவிக்கும் நூலாக இது வரவேற்பு பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Book Details
Book Title எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் (Ellorukkumana Thalaivar Ambedkar)
Author அம்பேத்கர்/B.R.Ambedkar
ISBN 978-93-94265-36-3
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 992
Year 2024
Edition 1
Format Hard Bound
Category Dalitism | தலித்தியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹190 ₹200
சாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
₹466 ₹490
Unless you change your social order you can achieve little by way of progress. You cannot mobilize the community either for defense or for the offense. You cannot build anything on the foundations of caste. You cannot build up a nation, you cannot build up morality. Anything that you will build on t..
₹75
’விசா’வுக்காக காத்திருக்கிறேன்..
₹24 ₹25