New
-5 %
ஜிம்முக்கு வாங்க
ராஜராஜன் ஆர்.ஜெ. (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2023
- Page: 98
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ராஜராஜன் ஆர்.ஜெ
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மொத்தத்தில் - உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவையிரண்டுமே தமது உள் நலத்திற்கு இன்றிலையாதவை. இவை இரண்டிற்குமே ஒருவித ஒழுக்கம் தேவைப்படுகிறது. இந்த ஒழுக்கத்தை தான் நான் கடந்த சில ஆண்டுகளில் மாறி மாறி கட்டமைக்க முயற்சிக்கிறேன்.
நடைப்பயிற்சியில் இருந்து ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், மோகா, பாட்மிட்டன் என பலவற்றை முயற்சித்தேன்.
இன்னொரு பக்கம், உணவு முறையில் இன்டெர்மிட்டண்ட் பாஸ்டிங் [Intermittent Fasting முறையை முயற்சித்தேன்.
எல்லாவற்றிற்குமான அடிப்படை ஒன்றாக இருந்ததை உணர்ந்தேன். அதாவது, ஒவ்வொரு நாளும், எவ்வளவு கலோரி உட்கொள்கிறோம், எவ்வளவு கலோரி எரிக்கிறோம் என்கிற கணக்கை பொறுத்து தான் நாம் உடல் எடையை குறைப்பதும், கூட்டுவதும் என்கிற எளிய கணக்கு புரிந்தது.
இந்த வேளையில் தான், எனது அலுவலகத்தின் எதிரே ஒரு ஜிம் தொடங்கப்பட்டது. என் மேனேஜர் நாமும் சேரலாம் என்றார்.
ஜிம்முக்கா? நானா? முடியுமா? என்று கடந்த 25 ஆண்டுகளில் கேட்ட அதே கேள்விகளையே மீண்டும் எனக்குள் கேட்டேன்.
ஆனால், ஜிம் என்பது என் வாழ்வின் ஒரு அங்கமாக மாறும் என்பதை நான் அப்போது சத்தியமாக நினைத்திருக்கவில்லை.
ஜிம் என் வாழ்வை எப்படி மாற்றியது?
உங்கள் வாழ்வையும் எப்படி மாற்றத்தக்கது?
ஏன் நாம் ஜிம்மில் சேர வேண்டும்?
ஏன் நாம் ஜிம்மில் சேருவதில்லை?
ஏன் நாம் ஜிம்மில் சேர்ந்து பிறகு கைவிட்டுவிடுகிறோம்?
ஜிம்மிற்கு செல்வதால் ஏற்படும் நீண்ட கால நன்மைகள் என்ன?
ஜிம் என்பது வெறும் உடற்பயிற்சிக்கு மட்டுமானதா?
ஜிம் உடற்பயிற்சியால் இறக்கிறார்கள் என்பது உண்மையா?
ஜிம் உடற்பயிற்சி என்பது கடினமானதா?
என பல கேள்விகள் உங்களுக்குள் எழலாம். அதற்கெல்லாம் விடையை நான் அடுத்த சில பக்கங்களில் தருகிறேன்.
தொடர்ச்சியாக படியுங்கள்.
| Book Details | |
| Book Title | ஜிம்முக்கு வாங்க (Jimmukku vanga) |
| Author | ராஜராஜன் ஆர்.ஜெ. |
| Publisher | ராஜராஜன் ஆர்.ஜெ (Rajarajan RJ) |
| Pages | 98 |
| Published On | Dec 2023 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் |