Menu
Your Cart

விருந்து

விருந்து
விருந்து
-5 %
விருந்து
கே.என்.செந்தில் (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தம் ரத்த உறவுகளின் மீது உயிரனைய நேசம் வைத்திருக்கும் எளிய மனிதர்களின் ஈரச் சித்திரம் இத்தொகுப்பின் பெரும்பான்மையான கதைகளில் தீட்டப்பட்டுள்ளது. குறைவான சொற்களில் பாத்திரங்களின் அகநிலைகள் சாத்தியப்படுத்தப்பட்டுள்ள கலைஅமைதி கூடிய இந்தக் கதைகளில் சிறார் உலகின் பரிசுத்தம், பெண்களின் நிகழ் கடந்த காலத் துயர், குடும்ப அமைப்பில் ஆண்களின் புற அக நெருக்கடிகள், முதியவர்களின் நோய்மை படிந்த தனிமை, அதிகாரத்தின் முன் சாதாரணமானவர்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுதல், பாலியல் விருப்பு, மீறல் ஆகியவை நம் மனத்தின் சமன் குலையும் விதத்தில் பதிவாகியுள்ளன. இந்தொகுப்பில் 'முடிவு கதையைக் கடக்க முடியவில்லை. நழுவும் வேட்டியைக் கட்டிக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு மகளைத் தூக்கிச் செல்லும் தகப்பனைப் பற்றிய இக்கதை கே.என். செந்திலின் கலைஉச்சம் என்று கூறலாம். சக உயிர்களின் இழப்பும் பிரிவும் ஒரு பிரபஞ்சத் துயரமாகிவிடும்போது அச்சமயத்திற்கான மீட்சிபேட்ல தன்னியல்பாகப் புனைவாகியுள்ள இக்கதைகளின் வாசிப்பனுபவம் ஒட்டுமொத்த மானுடத்தின் மீது நம் கரிசனம் குவியும் இடத்திற்கு நம்மை நகர்த்துகிறது. இது இக்கதைகளை மேலும் முக்கியத்துவமானதாக ஆக்குகிறது.
Book Details
Book Title விருந்து (virundhu)
Author கே.என்.செந்தில் (K.N.Senthil)
ISBN 9789355230775
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உண..
₹128 ₹135
வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது. கடந்த காலம் சுமத்தியுள்ள சுய பெருமிதங்களிலிருந்தும் இ..
₹86 ₹90
தன் படைப்புகளைப் பற்றிய சு.ரா.வின் நாற்பதாண்டு காலப் பதிவுகளின் தொகுப்பு. கட்டுரைகள், என்னுரைகள், உரைகள், கேள்வி பதில், நாட்குறிப்பு எனப் பல வகைமைகளில் சு.ரா.வின் தன்மதிப்பீடுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘தாழ்வு மனப்பான்மையை அடக்கத்தின் அடையாளமாகவும் தன் திறன் மதித்தலை அகங்காரத்தின் சின்னமாக..
₹238 ₹250
சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாகக் குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் ..
₹190