
New
-5 %
காளி - பேரிருளின் ஒளி
ஸ்ரீ க்ருபானந்த நாதன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: PEN BIRD PUBLICATION
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அழிப்பவள் அல்ல, சுத்திகரிப்பவள்!"
தன்னை அறிதலே அனைத்தினும் ஆகச்சிறந்த செயல்! அதற்கு இறைவழிபாடு மட்டுமே சாலச்சிறந்த வழியாகும். அதனினும் ஶக்தி வழிபாடு அனைத்திற்கும் முடி மணியாய் விளங்குகிறது.
பொதுவாக காலி என்றதும் அவளை நாம் பார்க்கும் பார்வை ஒருவித பயமும், பதட்டமும் கலந்தே உள்ளது. காரணம் அவளுக்குத் தரப்பட்ட வடிவம்! உக்ர ரூபமாக, கோர மற்றும் பயங்கர வடிவமாக இருப்பதாலேயே அவளின் தாய்மையை நாம் கண்டுகொள்வதில்லை. பொதுவாக கருமை என்றாலே தீமை என்றும், மங்கலமற்ற தன்மை எனவும், அது அத்ருஷ்டத்திற்கு எதிரானது என்றெல்லாம் தவறான புரிதலை ஏனோ நம் மனதில் புகுத்திவிட்டார்கள். அதையே நாமும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், உண்மையில் கருமை என்பது அனைத்தையும் தன்னகத்தே வைத்து இருப்பது. அதனால்தான் காலி கருநிறத்தில் இருக்கிறாள். அவள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளவள். தன்னிடம் இருந்தால்தானே அடுத்தவருக்கு கொடுக்கவியலும்! இதன்படி அவள், கொடுக்கும் தெய்வம் என்பது புலப்படுகிறது.
'படைப்பதுவும் காப்பதுவும் மறைப்பதுவும் உந்தன் லீலை
எந்தநிலை வந்தபோதும் வணங்குவதே எந்தன் வேலை.'
Book Details | |
Book Title | காளி - பேரிருளின் ஒளி (Kaali - Perirulin Oli) |
Author | ஸ்ரீ க்ருபானந்த நாதன் |
Publisher | PEN BIRD PUBLICATION (PEN BIRD PUBLICATION) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், 2025 New Arrivals |