Menu
Your Cart

காதுகள்

காதுகள்
-5 %
காதுகள்
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை. -பிரபஞ்சன்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எம். வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி. தந்துவிடுகிறார். ஒரு நெசவா..
₹190 ₹200
“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப் பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது . . . அவர..
₹238 ₹250
நித்யகன்னிநாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதைசொல்லவும் காத்துக்கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுகுள்ளும் மீண்டும் ஒரு தனத்திர்க்குள்ளும் அனுமதிக்கும் ஒருபடைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான படைப்புதான், அவை உருவாக்க..
₹214 ₹225
உயிரின் யாத்திரை - எம்.வி.வெங்கட்ராம் :..
₹86 ₹90