Menu
Your Cart

கடவுள் தொடங்கிய இடம் (Vikatan)

கடவுள் தொடங்கிய இடம் (Vikatan)
-5 %
கடவுள் தொடங்கிய இடம் (Vikatan)
அ.முத்துலிங்கம் (ஆசிரியர்)
₹147
₹155
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்... குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர் நாடி. எழுத்தாளர் முத்துலிங்கம் அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் தங்க நகை போல அலங்கரிக்கும் வித்தைக்காரர். படியுங்கள்... விறுவிறு அனுபவம் காத்திருக்கிறது. கடவுள் தொடங்கிய இடத்தைக் கண்டடையுங்கள்.
Book Details
Book Title கடவுள் தொடங்கிய இடம் (Vikatan) (Kadavul Thodangiya Idam)
Author அ.முத்துலிங்கம் (A.muthulingam)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year 2012
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீனத் தமிழ் உரைநடைக்கு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ. முத்துலிங்கத்தின் எழுத்து. இந்நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளின் நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, இலங்கை என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் முற்றிலும் பரிச்சயமி..
₹181 ₹190
உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா,..
₹214 ₹225
முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் அவர் கதைகளில். ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார்...
₹190 ₹200
கொலுத்தாடு பிடிப்பேன்வாய்மொழி மரபின் தனித்தன்மைகளை,எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங்கத்தின் மொழி,அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த அழகையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு புதிய சுவையையும் சேர்ப்பதாக அமைந்தது.பல்வேறு நிலப்பரப்புகள்,மாறுபட்ட பருவநிலைக..
₹570 ₹600