Menu
Your Cart

கடவுளின் நண்பர்கள்

கடவுளின் நண்பர்கள்
-5 %
கடவுளின் நண்பர்கள்
கோகுலக்கண்ணன் (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் கொந்தளிப்புகள் அழுத்தமாகப் பதிவாகின்றன. இட ஒதுக்கீடு என்னும் கோட்டின் இரு புறமும் நிற்கும் மாணவர்களின் உணர்ச்சிகளும் போக்குகளும் பக்கச் சார்பு இல்லாமல் வெளிப்படுத்தப்படுகின்றன. தர்க்கரீதியான வாதங்களைத் துணைக்கு அழைக்காமல் உணர்ச்சிகளின் தளத்திலேயே யதார்த்தத்தை எதிர்கொள்கிறது இந்நாவல். மாணவர் விடுதி என்னும் பின்புலம் இவ்வளவு துல்லியமாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் பதிவானதில்லை. மண்டல், கோவில் சார்ந்த சலனங்களுடன் ராகிங் என்னும் அம்சமும் நாவலில் கையாளப்படுகிறது. ராகிங்கின் பல்வேறு அம்சங்கள் அவற்றின் குரூரங்களூடன் பதிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் புனைவம்சத்துடனும் தேவையான மௌனங்களுடனும் வெளிப்படுவது நாவலின் கலைப் பெறுமானத்தைக் கூட்டுகிறது. கதாபத்திரங்களின் சித்திரங்கள் கதைப் போக்கிலும் உரையாடல்களிலும் துலங்குவது நாவலாசிரியரின் எழுத்தாளுமைக்குச் சான்றாக விளங்குகிறது.
Book Details
Book Title கடவுளின் நண்பர்கள் (Kadavulin Nanbargal)
Author கோகுலக்கண்ணன் (Gokula Kannan)
ISBN 9789380240985
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 176
Published On Nov 2010
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புலம்பெயர் வாழ்வின் அந்நியத் தன்மை, வெறுமை ஆகியவை ஈழத் தமிழர்களுக்கும் மேலான வாழ் நிலையை நாடிச் சென்ற தமிழகத் தமிழர்களுக்கும் பொதுவானவை. இப்பொதுத்தன்மைகளையும் மாறுபடும் புள்ளிகளையும் கலிஃபோர்னியாவில் வாழும் கோகுலக்கண்ணனின் எழுத்தில் தெளிவாக இனங்காண முடிகிறது. அன்னிய மண்ணில் முளைக்கும் அடையாளச் ..
₹143 ₹150
தான் காணும் காட்சியையும் அதைக் காணும் தன்னையும் ஒரே கணத்தில், ஒரே அனுபவப் புள்ளியில் நிலைநிறுத்தும் லாகவம் கோகுலக்கண்ணனுக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது. கவிதையின் சாகசம் மொழி இயங்கும் தளத்தில் நிகழாமல் மொழி விளையும் தளத்தில் நிகழ்கிறது இவரது கவிதைகளில்...
₹71 ₹75