Menu
Your Cart

கள்ளம்

கள்ளம்
-5 % Out Of Stock
கள்ளம்
தஞ்சை ப்ரகாஷ் (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தஞ்சாவூர் - கள்ளத்தை கலைநயத்துடன் கூடிய உயர் தொழில் நுட்பமாகி உலகத்தரத்திற்கு தந்த கலைகளின் கலைக்களஞ்சியம். இன்று எல்லாம் தூர்ந்து போய் , வறண்டு, புழுதி பறக்க பெருமைகளின்  எச்சமாய் இருண்டு போய்ப் பயமளிக்கிறது. தொலைந்து போன பெருமையை வரலாற்றுப் பதிவாக கள்ளம் நாவலில் தந்திருக்கிறார் ப்ரகாஷ் உலகச் சந்தையில் பொருள் மதிப்பு மிக்க வணிகமாய் கலை கள்ள ஒப்பனை புனைவதை எதிர்க்கும் ஓர் உரிய கலைஞனின் அப்பட்டமான வாழ்வை கள்ளம் குடித்து காவியமாக்கி தந்திருக்கிறார் ப்ரகாஷ் கலை பரிமாணம் கொள்ள வேண்டும். விதவிதமாய் வெளிப்பட்டு கலைஞனின் தனித்துவ பிழிவாய் தன் தரத்தை மெய்ப்பிக்க வேண்டும். தேங்கி, முடங்கி, மழுங்கிவிடக் கூடாது. இந்த அற்புதக் கலை ஆயுத்த நகலாகும் ஆபத்தான கள்ளத்திற்கெதிராய் கலக வடிவமெடுத்திருக்கும் இந்த நாவலை, பிரகாஷ் தவிர வேறெந்த கொம்பனாலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்பதை வாசிக்கிறவர்கள் உணர்ந்து கொள்ளும் அனுபவத்தை தருவதே இந்தக் கள்ளம் நாவலின் உன்னதம்.
Book Details
Book Title கள்ளம் (Kallam)
Author தஞ்சை ப்ரகாஷ் (THANJAI PRAKASH)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 224
Year 2018
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்கள..
₹428 ₹450
ஐம்பது வருடத்திற்கு முன் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை சற்று கனமான எழுத்துக்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத வடிவிலும் கூறியுள்ளார்...என்றாலும் பெண்களின் மீது உள்ள அழுத்தம் இன்றும் குறையவில்லை என்பது வெட்கப்படவேண்டிய உண்மை.......
₹114 ₹120
கரமுண்டார் வூடுஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்..
₹333 ₹330