Menu
Your Cart

கமலி

கமலி
கமலி
சி.மோகன் (ஆசிரியர்)
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு கோயில் நகரத்தில் எட்டு வயதுச் சிறுமியாகப் பட்டுப் பாவாடை சட்டையுடன் குதிரை வண்டியில் அப்பாவும் அவளும் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்பா வெண்பட்டு வேஷ்டியும் துண்டும் அணிந்திருக்கிறார். அவர்கள் சென்றுகொண்டிருக்கும் குதிரை வண்டிக்கு முன்னும் பின்னுமாக ஒரு பச்சைக் கிளி சுற்றிச் சுற்றி வருகிறது. அப்பா அதை அவளுக்குச் சுட்டிக் காட்டுகிறார். அவள் அதைக் கூப்பிடுகிறாள். அது பறந்து உள்ளே வந்து அவளுடைய மடியில் உட்கார்ந்துகொள்கிறது. அவள் அதனுடன் கொஞ்சி விளையாடுகிறாள். குதிரை வண்டி சன்னதித் தெருவில் நிற்கிறது. அவர்கள் இறங்கும்போது, கிளி பறந்து செல்கிறது. கமலி அதையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அங்கு ஒரு வரிசையாக ஒரு ஓரத்தில் பல மூதாட்டிகள் பிச்சைத் தட்டுடன் அமர்ந்திருக்கிறார்கள். பறந்து சென்ற கிளி ஒரு மூதாட்டியின் தோளில் போய் அமர்கிறது. கமலி அந்த மூதாட்டியைப் பார்க்கிறாள். அது அவளுடைய அம்மா அடையாளம் தெரியாமல் மெலிந்து தேசலாக இருக்கிறாள். அவளைப் பார்த்துக் கைகளால் அழைக்கிறாள். அவள் அம்மா என்று கூவியபடி அவரை நோக்கி ஓடுகிறாள்...

(நாவலிலிருந்து)

Book Details
Book Title கமலி (Kamali)
Author சி.மோகன் (C. Mohan)
ISBN 9788199250703
Publisher சால்ட் பதிப்பகம் (Salt publications)
Pages 136
Year 2025
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha