Menu
Your Cart

கந்தில் பாவை

கந்தில் பாவை
-5 %
கந்தில் பாவை
தேவகாந்தன் (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கந்தில் பாவை

1880-2015 க்கு இடைப்பட்ட நீண்டகாலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில்பாவை’. மனநிலை பாதிப்பு எனும் நோய் பரம்பரைபரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும், யுத்தம் அந்த வடுக்களை ரணமாக்கி அவர்களைச் மனச்சிதைவு நிலைக்குத் தள்ளும் அவலத்தையும் நான்கு தலைமுறைகளின் அனுபவங்களினூடாக நாவல் வெளிப்படுத்துகிறது.நான்கு கட்டங்களாய் நிகழும் தலைமுறைகளின் தனித் தனிக் கதைகளும், நாவலென்ற ஒற்றைச் சரட்டில் இணையும்படியாக இதன் புனைவு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. பின்னோட்ட விசையில் தன் கதையை விரித்துச் செல்லும் நாவல், அதையே தன் வடிவ உத்தியாகவும் சமைத்துக்கொள்கிறது.யாழ்ப்பாணத்தின் புராதன தலைநகராகக் கருதப்பெறும் கந்தரோடையையும் அதைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக் களமாய்க்கொண்டு, வரலாறு - ஐதீகம் ஆகிய இரட்டைத் தடங்களில் தன் புனைவுப் பயணத்தைச் செய்திருக்கிறது நாவல்.

Book Details
Book Title கந்தில் பாவை (Kanthil Paavai)
Author தேவகாந்தன் (Devakantan)
ISBN 9789352440221
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 264
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கனடா தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு. தீவிர வாசகர்களுக்கான இயங்கு தளம்..
₹95 ₹100
கதா காலம்ஆதிக்கதைசொல்லிகளான வைசம்பாயனன், உக்கிரசிரவஸிலிருந்து சூதனாய், மாகதனாய், பாணனாய், நடனாயென விரிந்த பெயரறியாக் கதைசொல்லிகள்வரை தத்தம் கால சிந்தனை விரிவுக்கேற்ப புனைந்திருக்கக்கூடிய திருப்பங்களின் வழி இக்காலத்திய சிந்தனைகளோடு சில பாத்திரங்களை மையப்படுத்தி மகாபாரதத்தின் இன்னொரு பிரதியாக இதை வாசக..
₹119 ₹125
கலிங்கு(நாவல்) - தேவகாந்தன் :ஈழம் சார்ந்த நாவல்.....
₹523 ₹550