கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு

கி.ரா என்றொரு கீதாரி - கட்டுரைத்தொகுப்பு

கி.ரா என்றொரு கீதாரி (கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்):

இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகபூபதி, தேவ மைந்தன், பாவண்ணன், அர.சீனிவாசன், பிரபஞ்சமித்ரன், கி.ரா.குறிஞ்சிவேலன், இராச.திருமாவளவன், சே.திருநாவுக்கரசு, தேவி கிரிசன், ஆகாசம்பட்டு ஷேசாலம், திரைப்பட நடிகர்சிவக்குமார், திரைப்பட நடிகர்- சார்லி, தெலுங்கு எழுத்தாளர். ருத்ர துளசிதாஸ், புதுவை- இளவேனில், கார்த்திக் புகழேந்தி, மற்றும் கழனியூரன் ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

கழனியூரன் சொல்வது போல், இவை இந்நூலுக்காகக் கேட்டு வாங்கித் தொகுத்த கட்டுரைகள் அல்ல. அவர்களாகவே பல்வேறு காலக்கட்டங்களில் கி.ரா குறித்து எழுதின கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து கொண்டு வந்த தொகுப்பு. தள்ளிப் பழுத்ததைவிட தானாய் பழுக்கும் பழங்களுக்கு ருசி அதிகம் என்பார்கள். ஆகவே தன்பழமாக இந்த கிரா என்ற கீதாரி நூல் இருக்கும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Rs. 160