Menu
Your Cart

கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்

கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
-5 %
கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
மு.இராமனாதன் (ஆசிரியர்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம். இளையோருக்கு, குறிப்பாகக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வாசிப்புக்கான நூல் என்பதைத் தாண்டி, வழிகாட்டியாகவும் அமையும். அணிந்துரையில் சமஸ் சீனாவின் வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் முன்னுதாரணம் இல்லாதவை. இவை சீனாவின் ஒரு முகம். யதேச்சதிகாரமும் மேலாதிக்கமும் இன்னொரு முகம். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகள் இந்த இரண்டு முகங்களையும் படம்பிடிக்கின்றன. ஹாங்காங்கின் சுயாட்சியையும் தைவானின் எழுச்சியையும் கலங்கிக் கிடக்கும் தென் சீனக் கடலையும் வரலாற்றுக்கு முகம்கொடுக்க மறுக்கும் ஜப்பானையும் கிழக்காசியக் கட்டுரைகள் பேசுகின்றன. அகதிகள் ஆக முடியாத ஈழத் தமிழர்களும், எவராலும் கவனிக்கப்படாத பர்மீயத் தமிழர்களும் நூலில் இடம்பெறுகிறார்கள். உக்ரைன் போரின் நதிமூலமும் இந்திய - சீன எல்லைச் சிக்கலும் விரிவாகப் பேசப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் பகல் வெளிச்ச மாற்றமும் அமெரிக்க ஜனநாயகத்தின் போதாமைகளும் டிரம்பிசமும் இன்னும் தமிழில் அதிகம் பேசப்படாத பன்னாட்டுப் பிரச்சினைகள் பலவும் இந்த நூலில் இடம்பெறுகின்றன.
Book Details
Book Title கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் (Kizhakkum merkum)
Author மு.இராமனாதன் (Mu.Ramanathan)
ISBN 9788196015343
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 232
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category International Politics | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

செ. முஹம்மது யூனூஸ் 42 ஆண்டுகளுக்கு முன்னால் பர்மா விலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் பிறந்து, வளர்ந்து 42 ஆண்டுகள் வாழ்ந்த, ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன யூனூஸின் பதிவுகள். இர..
₹266 ₹280
அ. முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன் என்று விரிகின்றன. அவரது கதை வெளியில் புலம்பெயர்ந்தோரின் அலைந்துழல்வும் அடையா..
₹309 ₹325
ஹாங்காங்கின் கட்டிடப் பணித்தலங்கள் தோறும் உயர்ந்து நிற்கும் இன்ந்த மூங்கில் சாரங்கள், ஹாங்காங்கின் சாரத்தை மெளனமாகப் பறைசாற்றுகிறது. இன்றைக்கு ஹாங்காங் ஒரு பின்னடைவைச் சந்திதிருக்கலாம். ஆனால் மூங்கில் சாரங்களைப் போலவே ஹாங்காங் மக்கள் ஒத்திசைவும், திண்மையும்,நெகிழ்வும் உடையவ்ர்கள். இந்த சாரங்களைப்போல..
₹181 ₹190
பொறியியல், உள்கட்டமைப்பு, உலக அரசியல் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் மு. இராமனாதன், தேர்ந்த இலக்கிய வாசகரும்கூட. உரைகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்படும் அவருடைய வாசிப்பனுவத்தின் பதிவு இந்த நூல். கூர்மையான வாசிப்புத்திறன் கொண்ட இராமனாதன் பிரதியிலுள்ள நுட்பங்களையும் பல்வேறு அடுக்குகளையும் துல்லியமாக உ..
₹228 ₹240