Menu
Your Cart

கூடுசாலை

கூடுசாலை
-5 %
கூடுசாலை
சி.சு.செல்லப்பா (ஆசிரியர்), பெருமாள் முருகன் (தொகுப்பு)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த ஆகச் சிறந்த ஒன்பது கதைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைக்கும் வாசிப்பிற்கு உகந்ததாக இருப்பதோடு பெரும் கதைசொல்லி அவர் என்பதையும் உணர்த்துபவை இக்கதைகள். மாடுகள் தொடர்பாக இத்தனை விவரங்களோடும் துல்லியத்தோடும் இவரளவுக்கு எழுதியவர்கள் இல்லை. வேளாண் வாழ்வில் மாடுகள் செல்வமாகக் கருதப் பட்டமைக்கு இக்கதைகள் அரிய சான்றுகள். மாடுகளை மையமாக வைத்து மனித உறவுகளும் மனநிலைகளும் செயல்பட்ட விசித்திரங்களை இவரது கதைகள் காட்டுகின்றன. அத்துடன் இயல்புடனும் கிராமத்துத் திண்ணைப் பேச்சுத்தன்மையிலும் அமைந்த மொழியை உத்தியாகவே கொண்டு எழுதியவர் அவர். மாடுகளைப் பற்றியல்லாமல் ஏற்கனவே கவனம்பெற்ற கதைகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு சிறுகதை வரலாற்றில் சி.சு.செல்லப்பாவின் இடத்தையும்  உறுதிப்படுத்துகிறது.
Book Details
Book Title கூடுசாலை (Koodusalai)
Author சி.சு.செல்லப்பா (Ci.Su.Sellappa)
Compiler பெருமாள் முருகன் (Perumal Murugan)
ISBN 9789382033608
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 127
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எவ்விதம் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதற்கான படைப்புச் சான்றுகள் மிகவும் அரிது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் மனித இயல்பின் காரணமாக மீறல்களாக இவை நடைபெற்றே வந்திருக்கின்றன. தொடர்புடையவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அகரீதியாகவும் புறரீதியாகவும் எதிர..
₹181 ₹190
‘தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைக்குள் கிடந்த கதையைச் சேர்த்தும் கதைக்குள் கிடந்த கட்டுரைகளை விலக்கியும..
₹565 ₹595
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும..
₹276 ₹290
ஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..
₹95 ₹100