- Edition: 1
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: சால்ட் பதிப்பகம்
எனக்கு சிறு வயதில், அம்மா எங்காவது கோவிலுக்கோ, திருமணத்திற்கு சென்றார் என்றாள். இருக்கும் ஒரு நல்ல பட்டு புடவையை கட்டி, அதன் மடிப்புகளை எல்லாம் சீராக மடித்து, அதன் பின்னர் அதன் சரியாக கீழே ஓரங்களை எல்லாம் சரி செய்து எப்படி இவ்வளவு மடிப்புகள் ஒரே அளவில் உள்ளது என அவ்வளவு வியப்பளிக்கும். குமாரத்தி நாவலில் அமிலி, நிர்மலா, அதிலும் காணிக்கை மேரியின் மூத்த சிறுபிள்ளை போன்ற குணமும், அவரது அறையின் பறவைகளின் ஈரவாசனை, அதற்கு அடுத்து மரிய நட்சத்திரம், நீர்காத்தலிங்கம், கெம்புராஜ், சலேத் என கதைகளையும் அவர்களின் கிளைக்கதைகளில் விரியும் நாவல் எனக்கு அதே அளவு வியப்பளிக்கிறது. புடவையின் மடிப்புகளில் சில வண்ணங்களும், ஓவியங்களும் தெரிந்தும் தெரியாதது போல இருப்பது போன்ற வருணனைகள் நாவல் முழுவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் அந்த புடவையை நெய்ததும் நரன் என்பதுதான். வெறுமன கதையை சொல்ல விருப்பமில்லை, வாசித்த போது கிடைத்த உணர்வுகளை உடனே சொல்லவேண்டும் என்பதால்தான் இந்த அரைகுறை பதிவு, மனமும் பாதி கதைக்குள்ளும், பாதி வீட்டிலும் இருக்கிறது. உணர்வு கொந்தளிப்பு அடங்கியவுடன் விரிவாக முதல் பதிவை எழுதுகிறேன். ஒவ்வொரு அத்தியாங்களுக்கும் இட்டிருக்கும் தலைப்பு, அந்த அத்தியாயம் முடிந்தவுடன் மீண்டுமொறை வாசிக்க வேண்டும். உதாரணமாக "அன்று நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் இறந்து கீழே விழுந்தன" என்ற அத்தியாயத்தி நட்சத்திரம் இரண்டாவது திருமணம் முடிந்த அன்று சரியாக முதல் கணவர் வரும் பொழுது, நட்சத்திரத்தின் மகள்களில் ஒருவரான ஞானப்பூ அப்பாவை எதிர்கொள்ளும் அத்தியாயத்திலிருந்து அடுத்த அத்தியாத்திற்கு நகர அத்தனை நேரம் எடுத்தது. அதை தான் இங்கு பகிர்ந்திருக்கிறேன். குமாரத்தி நிஜந்தன் தோழன்
| Book Details | |
| Book Title | குமாரத்தி (kumaaraththi) |
| Author | நரன் (Naran) |
| Publisher | சால்ட் பதிப்பகம் (Salt publications) |
| Edition | 1 |
| Format | Paperback |