Menu
Your Cart

குமாரபுரம் ஸ்டேஷன்

குமாரபுரம் ஸ்டேஷன்
-5 % Available
குமாரபுரம் ஸ்டேஷன்
கு.அழகிரிசாமி (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கு.அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - ஜூலை 5, 1970). சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்தவர். ‘உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ மாத இதழில் பிரசுரமானது. ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். கு.அழகிரிசாமி தம் கதைகளில் பல்வேறு கதாப்பாத்திரங்களைப் படைத்திருந்தாலும், குழந்தைகளைப் பல கதைகளில் கதாப்பாத்திரங்களாக படைத்துள்ளார். அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று, குமாரபுரம் ஸ்டேசன், தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, பெரிய மனுசி போன்ற கதைகளில் குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற வெள்ளை மனதை வெளிப்படுத்தியவர். தம்பி ராமையா கதையை படிப்பவர்கள் கதையின் முடிவில் தம்பி ராமையாவுடன் பயணிப்பது போன்ற உணர்வை பெறுவார்கள். கு.அழகிரிசாமி தம் கதைகளில் குழந்தைகளின் விருப்பு வெறுப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பு, சோகம், சிரிப்பு, அழுகை, பயம் போன்ற உணர்வுகளைக் கதைகளாக உருவாக்கியவர். இளையதலைமுறை அவசியம் வாசிக்கப்பட வேண்டியவர் கு.அழகிரிசாமி. இலக்கிய சிகரங்கள் வரிசையில் கு.அழகிரிசாமி கதைகளில் முக்கியமான சிலவற்றைத் தொகுத்து வெளியிடுவதில் எமது விகடன் பிரசுரம் பெருமை அடைகிறது. வாருங்கள் இலக்கியமாய் வாழ்ந்த அந்த தெற்கத்தி ஆன்மாவை வாசிப்போம்.
Book Details
Book Title குமாரபுரம் ஸ்டேஷன் (Kumarapuram Station)
Author கு.அழகிரிசாமி (Ku.Azhagirisami)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ராஜா வந்திருக்கிறார்கு. அழகிரிசாமயின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக் காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதை..
₹323 ₹340
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின்..
₹1,853 ₹1,950
புது வீடு புது உலகம்(நாவல்) - கு.அழகிரிசாமி :தமிழின் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகவே பெரிதும் அறியப்படுகிறார். நாவல், குழந்தைக் கதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் என்று பல தளங்களிலும் பங்களித்தவர் அவர். கு.அழகிரிசாமி எழுதி சுதேசமித்திரனில் தொடர..
₹750