Menu
Your Cart

மாயநதி

மாயநதி
-5 %
மாயநதி
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘மாயநதி’ தன்பாலுறவு விருப்பம் கொண்ட இருபெண்களைக் குறித்தது. இப்படியான உரிப்பொருளை எடுத்து எழுதுவதற்கு இன்றைய இளைஞர்கள் தைரியமாக முன்வருகிறார்கள். ஒரே ஒரு ‘கெட்ட வார்த்தை’ போட்டு எழுதியதற்கு வசையும் புறக்கணிப்பும் பெற்றவன் நான். இப்போதைய எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம் அருமையானது. எதையும் எழுதலாம் என்றால் இந்தப் பெருவெளிப் பரப்பில் உற்சாகமாகத் துள்ளாட்டம் போட்டுச் செல்லலாம். ‘மாயநதி’யில் அந்தத் துள்ளாட்டத்தைக் காண்கிறேன். சாதிப் பெருமிதம், ஆணவக் கொலை என்று திரியும் ஆட்கள் நிறைந்திருக்கும் கிராமங்கள் நமது. இங்கே பெண்ணின் விருப்பம், ஆசைகள் எல்லாம் மாயநதியாக மறைந்து போக வேண்டியதுதான். சாதி ஆணவத்திற்கு ஆண் பெண் வித்தியாசம் இல்லை. கொலை பற்றிய குற்றவுணர்வும் இல்லை. எப்படி இத்தனை ஆழமாகச் சாதியுணர்வு வேர் கொண்டிருக்கிறது? தர்க்கரீதியான நியாயம் எதுவுமற்ற ஒன்று எப்படி மனிதர்களை இவ்வாறு வெறிகொள்ளச் செய்கிறது? பொதுப்புத்திக்கு மாறுபட்ட விருப்பம் கொண்டவர்கள் குடும்பத்திலிருந்து வெளியேறினால்தான் வாழ முடியுமா? அப்படியும் வாழ விடுவார்களா? தன் விருப்பங்களை முடக்கிக்கொண்டு பிணமாக வாழ்வதுதான் விதியா? சாதிக் கட்டுக்களும் பெருமிதங்களும் என்றைக்குத்தான் உடைந்து நொறுங்கும்? ரோஹித்தின் எழுத்து இவற்றைப் பரிசீலிக்கிறது. பாத்திரங்களைத் தன்னியல்பில் இயங்க விட்டுப் புறத்தே நின்று எவ்வளவு தூரம் போவாயோ போ என்கிறது. மூக்கணாங்கயிற்றில் கோத்த கட்டுக்கயிறு எவ்வளவு நீளம் என்று அறிய முடியாத அளவு விட்டுப் பிடிக்கிறார். தன்பாலின விருப்பம் கொண்ட பெண்ணின் உணர்வுகளை மிதமான சொற்களிலேயே கடத்திவிடுகிறார். நாமக்கல் மாவட்ட வட்டார மொழி இத்தனை வன்மம் கொண்டதா என்று அச்சம் தோன்றும் வகையில் இயல்பாக எழுதிச் செல்கிறார். மேட்டாங்காட்டில் குரலோங்கப் பேசும் மனிதர்களின் முகங்கள் துல்லியமாகக் காட்சியாகின்றன. குடும்பத்தையும் சாதியையும் மீறி வெளிவர இயலாத நிலையை நாவல் காட்டினாலும் முந்தைய காலத்தை ஒப்பிடும்போது இது ‘ஓரடி முன்னால்’ என்று தோன்றுகிறது. - பெருமாள்முருகன்
Book Details
Book Title மாயநதி (Mayanadhi)
Author ரோஹித் ராஜேந்திரன்
ISBN 9788196280611
Publisher கற்கைப் பதிப்பகம் (Karkkai pathippakam)
Pages 106
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Novel | குறுநாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author